Home /News /technology /

இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!

இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!

Malware

Malware

Malware | தொழில்நுட்ப உலகில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கியமான அப்டேட்கள் உள்ளன. அதில் சிறந்த தொழில்நுட்ப தலைப்புச் செய்திகள் இதோ..

தொழில்நுட்ப உலகில் பல நிகழ்வுகள் நடப்பதால், உங்களுக்கு தேவையான முக்கியமான செய்திகளை கண்காணிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ‘டாப் டெக் நியூஸ்’களில், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கியமான அப்டேட்கள் உள்ளன. அதில் சிறந்த தொழில்நுட்ப தலைப்புச் செய்திகள் இதோ..

ரிலையன்ஸ் ஜியோ 100 ஜிபி டேட்டாவுடன் ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப் சலுகையை அறிமுகப்படுத்துகிறது :

ஜியோ நிறுவனம் HP நிறுவனத்துடன் இணைந்து ஜியோ ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப் எனப்படும் புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை வாங்குபவர்களுக்கு 100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது, மேலும் இலவச ஜியோ இணைப்பு 365 நாட்கள் செல்லுபடியாகும். HP தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்களைக் கொண்டுள்ளது, இது சிம் ஸ்லாட்டுடன் வருகிறது, இது பயணத்தின்போது இணைய இணைப்பைப் பெற உங்களை அனுமதிக்கிறது.

புதிய மால்வேர் 'ஆட்டோலிகாஸ்': இந்த 8 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விரைவில் நீக்கவும் :

கூகுளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் சில மால்வேர்கள் உள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவது புதிதல்ல, ஆட்டோலிகோஸ் என்ற மால்வேர் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்றுள்ளது, மேலும் இது ப்ளே ஸ்டோரில் எட்டு பிரபலமான ஆப்ஸுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இவை 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இப்போது கூகுளால் அகற்றப்பட்டுள்ளன. அறிக்கைகளின்படி, இந்த எட்டு app-களை அகற்ற கூகுளுக்கு ஆறு மாதங்கள் ஆனது.



இந்த 8 ஆப்ஸ்களை உடனடியாக நீக்கவும்:

Vlog Star Video Editor (1 million downloads)

Creative 3D Launcher (1 million downloads)

Wow Beauty Camera (1,00,000 downloads)

Gif Emoji Keyboard (1,00,000 downloads)

Razer Keyboard & Theme (10,000 downloads)

Freeglow Camera 1.0.0 (5,000 downloads)

Coco Camera v1.1 (1,000 downloads)

Funny Camera (500,000 downloads)

Also Read : Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?

செய்திகளை காண்பிப்பதற்காக ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்த, தொழில்நுட்ப நிறுவனங்களை மத்திய அரசாங்கம் கட்டாயப்படுத்தலாம் :

பிற நாடுகள் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்கும் இடையே வருவாய் பகிர்வு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருப்பதால், பெரிய டெக் பதிப்பாளர்களை (Big Tech pay publishers) இந்த தளங்களில் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், இந்த மாற்றத்தை ஏற்படுத்த ஐடி சட்டங்களை திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறினார்.

Also Read : நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !

"தற்போது பெரிய டெக் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை சக்தி, இந்திய ஊடக நிறுவனங்களுக்கு பாதகமாக அமைகிறது, இது புதிய சட்டங்கள் மற்றும் விதிகளில் தீவிரமாக ஆராயப்படும் ஒரு பிரச்னை" என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

இந்த புதிய சட்டம் செயல்படுத்தப்பட்டால், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களின் அசல் உள்ளடக்கத்தைப் (original content) பயன்படுத்தி சம்பாதித்த வருவாயில் ஒரு பங்கை பிக் டெக் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Apps, Google, Technology

அடுத்த செய்தி