ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

MS Word டாக்குமென்ட்டில் எக்ஸ்ட்ரா அல்லது பிளாங்க் பேஜை டெலிட் செய்வது எப்படி!

MS Word டாக்குமென்ட்டில் எக்ஸ்ட்ரா அல்லது பிளாங்க் பேஜை டெலிட் செய்வது எப்படி!

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஒரு டாக்குமென்டின் முடிவில் பிளாங்க் பேஜை உருவாக்க முனைகிறது. கடைசி பேஜில் இறுதி பாராகிராஃப் உள்ளதால் அது மட்டும் மறைந்துவிடாது.

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஒரு டாக்குமென்டின் முடிவில் பிளாங்க் பேஜை உருவாக்க முனைகிறது. கடைசி பேஜில் இறுதி பாராகிராஃப் உள்ளதால் அது மட்டும் மறைந்துவிடாது.

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஒரு டாக்குமென்டின் முடிவில் பிளாங்க் பேஜை உருவாக்க முனைகிறது. கடைசி பேஜில் இறுதி பாராகிராஃப் உள்ளதால் அது மட்டும் மறைந்துவிடாது.

  • 3 minute read
  • Last Updated :

MS Word ஃபைலில் உள்ள பிளாங்க் பேஜ்கள் (Blank pages), பிரின்டவுட் எடுக்கும் போது உங்களுக்கு தலைவலியை உண்டாக்கலாம் அல்லது உங்களை அன்ப்ரொஃப்பஷனலாக (unprofessional ) காட்டலாம். உங்கள் டாக்குமென்ட்டை நீங்கள் வேறு ஃபைல் ஃபார்மெட்களுக்கு மாற்றினால், பிளாங்க் பேஜ்கள் அதை ஃபார்மெட் செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். பலருக்கு Word-ல் பபேஜ்களை எவ்வாறு டெலிட் செய்வது என்ற குழப்பம் இருக்கும். மைக்ரோசாஃப்ட் வேர்டில் ஒரு பேஜை டெலிட் செய்வதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது. இதை எப்படி செய்வது என்பதை கீழே பார்க்கலாம்..

MS Word-ல் எக்ஸ்ட்ரா பேஜை டெலிட் செய்வது எப்படி.?

backspace அல்லது delete-ஐ பயன்படுத்தலாம்: Word -ல் பேஜை டெலிட் செய்ய இது எளியவழி. பிளாங்க் பேஜ் அல்லது டெக்ஸ்ட், கிராபிக்ஸ் அல்லது எம்ப்டி பாராகிராஃப் கொண்ட பேஜாக இருந்தாலும், Windows PC அல்லது லேப்டாப்பில் உள்ள ‘Backspace’ பட்டனை பயன்படுத்தி அல்லது Mac-ல் ‘Delete’-ஐ பயன்படுத்தி டாக்குமென்ட் ஃபைலில் இருந்து அதை டெலிட் செய்யலாம்.

* கர்சர் அல்லது Control + A அல்லது Command + A ஆப்ஷன்கள் மூலம் டெலிட் செய்ய விரும்பும் முழுபேஜையும் செலக்ட் செய்யவும்.

* இப்போது Backspace அல்லது Delete பட்டன்களை அழுத்தவும்

* மைக்ரோசாஃப்ட் வேர்டில் உள்ள வேர்ட் ஃபைலில் இருந்து தேவையற்ற அல்லது பிளாங்க் பேஜ் அகற்றப்படும்

வேர்ட் ஃபைல் மிகவும் பெரியதாக இருந்தால் மற்றும் பிளாங்க் பேஜ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால், 'நேவிகேஷன்' pane உதவியை நாடலாம். டாப் மெனுவிலிருந்து View-வை செலக்ட் செய்து Show செக்ஷனில் உள்ள Navigation Pane பாக்ஸிற்கு அடுத்துள்ள பாக்ஸில் டிக் செய்வதன் மூலம் நீங்கள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் MS Word-ல் ஆவணத்தின் இடது புறத்தில் ஒரு புதிய column ஓபன் ஆகும். பின் உங்கள் டாக்குமென்ட்டில் உள்ள அனைத்து பேஜ்களும் காண்பிக்கும். word file-ல் பிளாங்க் பேஜ்களை கண்டுபிடிக்க அதன் மூலம் ஸ்க்ரால் செய்யலாம்.

ஃபைன்ட் அண்ட் ரீப்ளேஸ் டூல் (Find and Replace tool):

Find and Replace டூலை பயன்படுத்தியும் Word-ல் இருந்து எக்ஸ்ட்ரா பேஜை டெலிட் செய்யலாம். பல பேஜ்களை கொண்ட பெரிய வேர்ட் ஃபைல்ஸ்களை கையாளவும், மெதுவாக செல்லவும் இந்த Find and Replace டூலை பயன்படுத்தலாம். Find and Replace-ஐ பயன்படுத்தி Word-ல் ஒரு பேஜை டெலிட் செய்ய கீழ்வரும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

* MS Word-ல் வேர்ட் ஃபைலை ஓபன் செய்து டெலிட் செய்ய விரும்பும் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்யவும்

* விண்டோஸில் ‘Ctrl + G’ அழுத்தவும், மேக்கில் ‘Option + Command + G’ -ஐ அழுத்தவும்

* இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் பாப்-அப் ஆகும். பின் Go To செக்ஷன் சென்று Enter Page Number பாக்ஸிற்கு சென்று உங்களுக்கு தேவைப்படும் பேஜ் நம்பரை என்டர் செய்யவும்

* கீபோர்டில் 'Enter'-ஐ அழுத்தி, 'Close' என்பதை அழுத்தவும்

* நீங்கள் டெலிட் செய்ய நினைக்கும் பேஜ் தானே அது என்பதை ஒருமுறை சரிபார்த்து கொள்ளவும்

* பின் கீபோர்டில் Delete அல்லது Backspace பட்டனை அழுத்தவும்

Also read... புகைப்படங்களை மொபைலில் இருந்து உங்களின் லேப்டாப்பிற்கு எளிதாக பகிர்ந்து கொள்வதற்கான வழிகள்

மைக்ரோசாஃப்ட் வேர்ட் ஒரு டாக்குமென்டின் முடிவில் பிளாங்க் பேஜை உருவாக்க முனைகிறது. கடைசி பேஜில் இறுதி பாராகிராஃப் உள்ளதால் அது மட்டும் மறைந்துவிடாது. இந்த தேவையற்ற இடத்தை அகற்றி, மைக்ரோசாஃப்ட் வேர்டில் பேஜை டெலிட் செய்ய ஏதுவாக பாராகிராஃப் மார்க்கர்ஸை விசிபிளாக்க விண்டோஸில் Ctrl + Shift + 8-ஐ அழுத்திப் பிடிக்கவும். Mac பயன்படுத்தினால் Command + 8-ஐ அழுத்தி பிடிக்கவும்.

Also read... குளிர்காலம் தொடங்கியதை வரவேற்க கூகுள் வெளியிட்டிருக்கும் அனிமேட்டட் டூடுல்!

பின் ஐகான்களில் இருமுறை கிளிக் செய்வதன் மூலம் பாராகிராஃப் மார்க்கர்களை செலக்ட் செய்யவும். பாராகிராஃப் மார்க்கர்ஸ் மற்றும் பிளாங்க் பேஜை அகற்ற 'Delete' அல்லது 'Backspace' பட்டனை அழுத்தவும். நீங்கள் தெரியாமல் தேவைப்படும் Word page-ஐ டெலிட் செய்திருந்தால், Windows இல் 'Control + Z' அல்லது Mac-ல் 'Command + Z' ஐ பயன்படுத்தி அதை ரெக்கவர் செய்யலாம்.

First published: