ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

'ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிடுங்கள்...’- வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஆவேசம்!

'ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிடுங்கள்...’- வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஆவேசம்!

ப்ரெயன் ஆக்டன்

ப்ரெயன் ஆக்டன்

ஃபேஸ்புக் பக்கங்களில் விளம்பரம் செய்யப்பட உள்ளதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரெயன் ஆக்டன் பயனாளர்களை ’ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிடுங்கள்’ எனத் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் வாட்ஸ்அப். இதனது இணை நிறுவனரான ப்ரெயன் தனது ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னுடைய கணக்கை டெலிட் செய்தது மட்டுமல்லாமல் பயனாளர்களையும் ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்யச்சொல்லி வலியுறுத்தி வருகிறார்.

தற்போது ’சிக்னல்’ என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். ”ஃபேஸ்புக்-க்கு எதிரான செய்திகள் பல வெளியாகின. பயனாளர்களின் தகவல்கள் வெளியில் கசிய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. நானும் இதில் சில பிரச்னைகளைச் சந்தித்தேன். அதைத் தொடர்ந்தே எனது ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்தேன்” என்றுள்ளார் ப்ரெயன்.

மேலும், “நான் சொல்வதைக் கேட்டு டெலிட் செய்தாலும் சரி இல்லையென்றாலும் அது உங்கள் விருப்பம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபேஸ்புக் பக்கம் வருகிற 2020-ம் ஆண்டிலிருந்து ஃபேஸ்புக் பக்கங்களில் விளம்பரம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ‘இந்த’ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தொல்லை தரும் வாட்ஸ்அப்..!

Published by:Rahini M
First published:

Tags: Facebook, WhatsApp