தேர்தல் விதிமீறல் பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புதல்!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தார்.

news18
Updated: March 21, 2019, 11:56 AM IST
தேர்தல் விதிமீறல் பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புதல்!
மாதிரி புகைப்படம்.
news18
Updated: March 21, 2019, 11:56 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பரவாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் பிரதிநிதிகளுடன் வரும் மக்களவைத் தேர்தலில் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தார்.

சமூக வலைதள விதிகள்சுனில் அரோராவின் கோரிக்கையை ஏற்ற சமூக வலைதள நிறுவன பிரதிநிதிகள், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதி மீறல் பதிவுகள் மற்றும் கமென்ட்களை, எவ்வளவு விரைவாக நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குவதாகவும், தொடர்ந்து அரசியல் மற்றும் தேர்தல் பதிவுகளை பதிவிடுவோர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.

அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கவுள்ள மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.

Also See...

Loading...

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...