Home /News /technology /

திடீர் ட்ரெண்டிங்கில் #DearNothing... தென்னிந்தியர்களின் அதிருப்திக்கு காரணம் என்ன.?

திடீர் ட்ரெண்டிங்கில் #DearNothing... தென்னிந்தியர்களின் அதிருப்திக்கு காரணம் என்ன.?

Nothing Phone 1 | இந்த போன் சந்தையில் வெளியான சில மணி நேரங்களிலேயே நத்திங் கம்பெனி ட்ரோல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nothing Phone 1 | இந்த போன் சந்தையில் வெளியான சில மணி நேரங்களிலேயே நத்திங் கம்பெனி ட்ரோல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nothing Phone 1 | இந்த போன் சந்தையில் வெளியான சில மணி நேரங்களிலேயே நத்திங் கம்பெனி ட்ரோல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

OnePlus நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான கார்ல் பெயின் தலைமையிலான நத்திங் பிராண்ட் இந்த வார தொடக்கத்தில் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டு சந்தையில் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் நோக்கத்துடன் நத்திங் போன் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) அன்று தனது முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

இந்த போன் சந்தையில் வெளியான சில மணி நேரங்களிலேயே நத்திங் கம்பெனி ட்ரோல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ள இந்திய மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், #DearNothing என்ற ஹேஷ்டேக் தென்னிந்தியாவில் ட்ரெண்டாகியது. நெட்டிசன்கள் அனைவரும் இந்நிறுவனத்திற்கு எதிராக ட்வீட் செய்தனர். நத்திங் கம்பெனியின் நிறுவனர் கார்ல் பெயினுக்கு எதிராக சமூக ஊடகங்களிலும், தொழில்நுட்ப சமூகத்தில் இருந்து ஏராளமான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தென்னிந்தியா மக்கள் ட்ரோல் செய்ய காரணம் என்ன.?

பிரபல யூடியூப் சேனல் 'பிரசாத்தெசின்தெலுகு' நத்திங் ஃபோன் 1 தொடர்பான வீடியோவை பதிவேற்றியது. போன் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று மாலை வீடியோ வெளியான பிறகுதான் உண்மையான கதையே தொடங்கியுள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன இருந்தது என்றால், வீடியோவில் பேசும் நபர் நத்திங் போன் 1 தென்னிந்தியர்களுக்கானது அல்ல என்று கூறி அந்நிறுவனத்தின் போன் பாக்ஸை திறக்கிறார். ஆனால் அந்த பெட்டி காலியாக உள்ளது. உள்ளே போன் இல்லை. ஆனால் அந்த காலி பெட்டியில் ஒரு கடிதம் உள்ளது. அந்தக் கடிதத்தில், 'இந்தச் சாதனம் தென்னிந்திய மக்களுக்கானது அல்ல'. மேலும் அந்தக் கடிதத்தில் நிறுவனத்தின் விவரங்கள் எதுவும் இல்லை. இப்படியொரு வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவியதை அடுத்து #DearNothing என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாக ஆரம்பித்தது. 

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது போல் லாஞ்ச் செய்துவிட்டு, தற்போது தென்னிந்தியர்களுக்கு மட்டும் இந்த ஸ்மார்ட்போன் கிடையாது என கடிதம் மூலம் பதிலளித்திருப்பது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் யாரும் இந்தியாவில் இல்லையா? என்ற விமர்சனங்கள் நிறுவனத்தின் மீது குவிந்து வருகிறது.

Also Read : நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !

ஆனால் உண்மையில் நிறுவனம் அப்படியொரு கடிதத்தை எழுதவில்லை என்பதில் தான் ட்விஸ்ட்டே அடங்கி இருக்கிறது. நத்திங் ஃபோன் 1க்கு மதிப்பாய்வு அலகுகள் இல்லாததை எதிர்த்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டது. உண்மையில் மறுஆய்வு அலகுகளை அனுப்புவது அல்லது அனுப்பாதது முற்றிலும் நிறுவனத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. இதற்காக யூடியூபர் ஒருவர் வேடிக்கையாக உருவாக்கிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி, இப்படியொரு சர்ச்சைக்கும் வழி வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : மாணவர்களுக்கு அசத்தல் சலுகையை அறிவித்துள்ள சாம்சங் நிறுவனம்

இதுகுறித்து நத்திங் நிறுவனத்திடம் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள அன்பினால் நாங்கள் வியப்படைகிறோம். நத்திங் ஃபோன் (1) எங்களின் முதல் ஸ்மார்ட்போன். இந்தப் பயணத்தில் நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டும் மேம்படுத்திக்கொண்டும் இருக்கிறோம். வெளிப்படையான மற்றும் மரியாதைக்குரிய உரையாடல்களை நாங்கள் நம்புகிறோம்; அது நமது சமூகம், நுகர்வோர், பங்குதாரர்கள் அல்லது ஊடக நண்பர்களுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். நாங்கள் ஒரு புதிய நிறுவனம். யாரையும் நிராகரிக்கவில்லை. அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். உங்கள் நிறை, குறைகளை ஏற்று மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்” என விளக்கம் அளித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Trending, Twitter

அடுத்த செய்தி