Home /News /technology /

உங்கள் விண்டோஸ் லேப்டாப்பில் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடுகிறதா - இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்

உங்கள் விண்டோஸ் லேப்டாப்பில் உடனுக்குடன் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடுகிறதா - இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்

லேப்டாப்

லேப்டாப்

எங்கும், எப்போதும் பணி செய்ய வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளதால், நம்மில் பெரும்பாலானவர்கள் லேப்டாப் பயன்படுத்தி வருகிறோம்.

எங்கும், எப்போதும் பணி செய்ய வேண்டிய சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளதால், நம்மில் பெரும்பாலானவர்கள் லேப்டாப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், நீங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கின்ற சமயத்தில் தான் திடீரென பேட்டரி சார்ஜ் குறைந்து உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நீங்கள் சில விஷயங்களை கவனமாக செய்தீர்கள் என்றால், உங்கள் லேப்டாப்பில் நாள் முழுவதும் சார்ஜ் நிற்கும்.

இது மட்டுமல்லாமல், உங்கள் பேட்டரியின் வாழ்நாள் காலமும் நீடிக்கும். பெரும்பாலான சமயங்களில், முறையான காற்றோட்ட வசதியின்றி லேப்டாப் ஹீட் ஆனதால் பேட்டரி சார்ஜ் அதிகம் எடுத்துக் கொள்கிறது என்று நண்பர்கள் சிலர் கூறுவதை கேட்டிருப்போம். அது மட்டுமல்லாமல், ஒரே சமயத்தில் வெவ்வேறு சாஃப்ட்வேர்கள் அல்லது டாஸ்க்குகளை நீங்கள் இயக்கிக் கொண்டிருப்பீர்கள் அல்லது பிரவுசரில் ஏராளமான டேப்களை திறந்து வைத்திருப்பீர்கள். இது எல்லாமே உங்கள் விண்டோஸ் பேட்டரிக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று தான்.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வொர்க் ஃபிரம் ஹோம் கலாசாரம் தொடங்கிய பிறகு, லேப்சாப் ஷட் டவுன் செய்வதே மிக அரிதான ஒன்றாகிவிட்டது. அப்படியென்றால் இதற்கு தீர்வுதான் என்ன? சில டிப்ஸ்களை கடைப்பிடிப்பதன் மூலமாக பேட்டரி சார்ஜை நாம் சேமிக்க முடியும்.

லேப்டாப்பில் பேட்டரி சார்ஜ் தக்க வைப்பது எப்படி?

ஏஸஸ் லேப்டாப்கள்

உங்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் மை ஏஸஸ் ஆப் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். இதில் கஸ்டமைசேஷன் டேப் ஓப்பன் செய்யவும். பவர் & பெர்ஃபாமென்ஸ் என்ற டேப் கீழ், பேட்டரி ஹெல்த் சார்ஜிங் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். இப்போது மேக்சிமம் லைஃப் ஸ்பேன் மோட் தேர்வு செய்யவும். இதன் மூலமாக உங்கள் லேப்டாப் 60% வரை மட்டுமே சார்ஜிங் ஆகும். சார்ஜ் 2 முதல் 3 சதவீதமாக குறைந்து விட்டால் மீண்டும் தாமாகவே சார்ஜ் ஏற தொடங்கும். ஓகே என்பதை டேப் செய்து சேவ் செய்யவும்.

Also read... அமேசான் பே உடன் இணைந்து ஃபாஸ்ட் டேக் சேவையை அறிமுகம் செய்துள்ள ஐசிஐசிஐ வங்கி

ஹெச்பி லேப்டாப்

உங்கள் லேப்டாப் ஆன் செய்யப்பட்டிருந்தால், பவர் ஆஃப் என்பதை கொடுக்கவும்.இப்போது ரீஸ்டார்ட் செய்து, எஃப் 10 பிரஸ் செய்வதன் மூலமாக ஹெச்பி பயோஸ் செட்டப் யுடிலிட்டி செல்லவும்.
பயாஸ் செட் அப் உள்ளே ரைட் ஆரோ கீ பயன்படுத்தி கான்பிகிரேஷன் டேப் ஓப்பன் செய்யவும். இப்போது டவுன் ஆரோ கீ பயன்படுத்தி, அடேப்டிவ் பேட்டரி ஆப்டிமைசர் எனேபிள் செய்யவும்.
பேட்டரி ஹெல்த் மேனேஜர் தேர்வு செய்து, மேக்ஸிமைஸ் மை பேட்டரி ஹெல்த் என்பதை தேர்வு செய்யுங்கள். இப்போது எஃப் 10 பிரஸ் செய்தாக், நீங்கள் செய்த மாற்றங்கள் சேவ் ஆன பிறகு எக்ஸிட் ஆகும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Laptop

அடுத்த செய்தி