கூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்!

Web Desk | news18
Updated: May 10, 2019, 1:26 PM IST
கூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்!
கூகுள்
Web Desk | news18
Updated: May 10, 2019, 1:26 PM IST
இந்தியர்கள் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியைவிட ஆன்லைன் டேட்டிங்கே முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பான கேள்விகளை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் எவ்வளவு பேர் டேட்டிங் தொடர்பான தகவல்களை தேடினர் என்ற சரியான விபரத்தை கூகுள் வெளியிடவில்லை.

பிப்ரவரி மாதத்தில் 6 ஆயிரம் இந்தியர்களிடம் கூகுள் நடத்திய ஆய்வில், தாங்கள் காதலை தேடுவதாக 92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ரொமான்டிக் இரவு உணவுடன் காதலை சொல்ல விரும்புவதாக 21 சதவீதம் பேரும், பரிசுகள் தந்து காதலை சொல்ல விரும்புவதாக 34 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க:
First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...