இப்போது ஸ்மார்ட்போன் இல்லாத மக்கள் என்று யாருமே இல்லை. அதிலும், அவர்கள் உபயோகிக்கும் சில முக்கிய செயலிகளில் வாட்ஸ்அப் செயலையும் ஒன்று. அதிலும் இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாட்ஸ்அப் ஒரு உயிர்நாடியாகும். மேலும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்பவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீட்டில் இருந்தபடியே செல்போன் உதவியோடு தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் வாட்ஸ்அப் சேவை மிக அதிகமாக தேவைப்படுகிறது.
பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் தளம் உலகில் மிகவும் பொதுவான செய்தியிடல் பயன்பாடாகும். ஏனெனில் இது மக்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இணைக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள தினமும் வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், வாட்ஸ்அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் தேவைப்படுவதை விட சற்று அதிகமான டேட்டாவை உபயோகிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் போனின் பேட்டரி குறைவதற்கு இது மேலும் வழிவகுக்கிறது. அதிர்ஷ்டவசமாக, வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை உபயோகிக்கும் போது அதன் டேட்டா நுகர்வு குறைக்க ஒரு வழி இருக்கிறது. உங்களின் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் போது அது உறிஞ்சும் டேட்டா நுகர்வு எவ்வாறு குறைப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, உங்களிடம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்சன் (ஆண்ட்ராய்டுக்கான வெர்சன் 2.21.12.21, iOS பெண்களுக்கான வெர்சன் 2.21.130.15) இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக அவசியம். இப்போது உங்கள் வாட்ஸ்அப்பில் செயலியை திறந்து அதன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் அதில் தோன்றும் செட்டிங்ஸ் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்றதும், யூசர்கள் ‘ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா’ விருப்பத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர், அவர்கள் "அழைப்புகளுக்கு குறைந்த தரவைப் பயன்படுத்துங்கள்" (Use less data for calls) என்ற விருப்பத்தை இயக்க வேண்டும். இது உங்கள் ஸ்மார்ட்போனில் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு தேவையான குறைந்தபட்ச தரவைப் பயன்படுத்த வாட்ஸ்அப்பை அனுமதிக்கும். IOS மற்றும் Android போன்கள் இரண்டிலும் இந்த வழிமுறையை தான் பின்பற்ற வேண்டும்.
Also read... இந்தியாவில் ரூ. 50000-க்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய தரமான, சிறந்த லேப்டாப்களின் பட்டியல்!
ஆண்டிராய்டு மற்றும் iOs தொலைபேசிகளில் வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன்களை நிர்வகிப்பது எப்படி?
பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பல சாதனங்களுக்கான எண்டு-டூ-எண்டு என்க்ரிப்ஷனை விரைவில் கொண்டு வரப்போவதாக கடந்த மாதம் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த நிறுவனம் வெளியிட்ட புதிய கொள்கை விதிமுறைகள் தொடர்பாக பலவேறு விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், இப்போது வரை அநேக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செய்தியிடல் தளம் என்றால் அது வாட்ஸ்அப் தான்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp