ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நுகர்வோரின் தரவில் பாதுகாப்பு இல்லை என்றால் ரூ 200 கோடி வரை அபராதம்!

நுகர்வோரின் தரவில் பாதுகாப்பு இல்லை என்றால் ரூ 200 கோடி வரை அபராதம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிப்ரவரி 2022-இல், மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவார் என்று நம்புவதாகக் கூறிய போதிலும், இது திரும்பப் பெறப்பட்டது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைய டிஜிட்டல் உலகில் தனிநபரின் தரவுகள் மோசமான முறையிலேயே கையாளப்படுகிறது. இது போன்ற தரவு மீறல்களைத் தடுக்க நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய நிறுவனங்கள், தரவுப் பாதுகாப்பு மசோதாவின் புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் சுமார் ரூ. 200 கோடி வரை அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இந்த மசோதாவின் விதிகளை அமல்படுத்த முன்மொழியப்பட்ட ஒரு தீர்ப்பளிக்கும் அமைப்பான தரவு பாதுகாப்பு வாரியம், நிறுவனங்கள் கேட்கும் வாய்ப்பை வழங்கிய பிறகு அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

  தரவு மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரிவிக்கத் தவறிய நிறுவனங்களுக்கு சுமார் ரூ.150 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என்றும், குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தவறினால் ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தரவு பாதுகாப்பு வாரியம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாபஸ் பெறப்பட்ட மசோதாவின் முந்தைய பதிப்பில், சட்டத்தை மீறியதற்காக ஒரு நிறுவனத்திற்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 15 கோடி அல்லது அதன் வருடாந்திர வருவாயில் 4 சதவீதம் என கூறியுள்ளது.

  ‘டிஜிட்டல் பர்சனல் டேட்டா ப்ரொடெக்ஷன் பில்’ என குறிப்பிடப்படும், புதுப்பிக்கப்பட்ட மசோதாவை இறுதி செய்வதற்கு இறுதி வரைவுப் பதிப்பை இந்த வாரம் வெளியிட உள்ளது. புதிய மசோதா தனிப்பட்ட தரவைச் சுற்றியுள்ள பாதுகாப்புகளை மட்டுமே கையாளும் என்றும், அதன் வரம்பில் இருந்து தனிப்பட்ட தரவுகளை விலக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட தரவு அல்லாத தரவு என்பது ஒரு தனிநபரின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத எந்தவொரு தரவையும் குறிக்கிறது.

  நுகர்வோரின் அச்சத்தைப் போக்குதல்

  இப்போது முன்மொழியப்படும் அதிக அபராதங்கள், தரவைப் பாதுகாப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒழுக்கத்தை அமல்படுத்துவதற்கும் வலுவான பாதுகாப்புகளை உருவாக்க நிறுவனங்களிடைய ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் இருந்து முந்தைய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாபஸ் பெற்றது. அதே போன்று, பாராளுமன்றத்தின் கூட்டுக் குழுவின் விவாதங்கள் உட்பட பல மறுபரிசீலனைகளை மேற்கொண்டது.

  Also Read : குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையே 57 சதவீதம் உயர்த்திய ஏர்டெல்... வாடிக்கையாளர்கள் ஷாக்

  ஆன்லைன் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான "விரிவான சட்ட கட்டமைப்பை" அரசாங்கம் விரைவில் இறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளனர். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிப்ரவரி 2022-இல், மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவார் என்று நம்புவதாகக் கூறிய போதிலும், இது திரும்பப் பெறப்பட்டது.

  மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இவர் அளித்த பேட்டியில், "மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தரவுகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தரவு மீறல்கள் ஏற்பட்டால், உரிய நிறுவனங்கள் நிதி அபராதம் போன்ற தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார். இந்த கடுமையான சட்ட திருத்தத்தால், வாடிக்கையாளர்களின் தரவை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் சமீபத்திய ட்வீட்டில் குறிப்பிட்டு இருந்தார்.

  தனிப்பட்ட தரவைத் தக்கவைத்துக்கொள்வதை நிறுத்தவும், முன்னர் சேகரிக்கப்பட்ட தரவை சேகரிக்கப்பட்ட ஆரம்ப நோக்கத்தை நிறைவேற்றிய பிறகு, அவற்றை நீக்கவும் வேண்டும் என்று இதில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய தொலைத்தொடர்பு மசோதா வரைவு, 2022ன் படி, இந்த மசோதாவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, விரிவான ஆலோசனைக்கு உட்பட்டு அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

  Published by:Vijay R
  First published: