ஆண்டிராய்டு ஓஎஸ், ஆப்பிள் ஐஓஎஸ் போன்று ஸ்மார்ட் போன்களுக்கான இந்திய தயாரிப்பு இயங்குதளம் அண்மையில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி யாதவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த புதிய இயங்குளத்தை அண்மையில் கூட்டாக அறிமுகம் செய்தனர்.
தரவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிற ஜனவரி 28ம் தேதி இந்த ஓஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து JandKops என்னும் நிறுவனம் இந்த இயங்குதளத்தை தயாரித்தது. அதே சமயம் BharOS குறித்து சைபர் பாதுகாப்பு குறித்து பரிசீலனை செய்து பார்க்க வேண்டியுள்ளது.
எந்தவொரு மால்வேரின் செயல்பாடு மற்றும் ஆபத்து நிறைந்த அப்ளிகேஷன்களின் செயல்பாடுகளை BharOS தடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக ஸ்மார்ட் ஃபோன்களில் இயங்கக் கூடிய ஓஎஸ் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும், பலர் இதை முழுமையாக நம்பவில்லை. ஏனெனில், BharOS என்பது ஏஎஸ்ஓபி-யை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது ஆண்டிராய்ட் ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் என்பதை அடிப்படையாகக் கொண்டு BharOS உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. BharOS செயல்பாடு, அதன் தோற்றம் என பெரும்பாலானவை கூகுள் ஆண்டிராய்ட் போலவே இருக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.
பாதுகாப்பு உத்தரவாதம் உண்டா..?
டேட்டா பாதுகாப்பு என்பது உலக அளவிலான விவாதப் பொருளாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், அப்போதைய ஆல்ஃபபெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டேட்டா தனியுரிமை கொள்கை, டேட்டா சேமிப்பு மற்றும் லொகேஷன் டிராக்கிங் போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதேபோல் 214 நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட 1,742 ஆண்டிராய்டு போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்ட, மொத்தம் 82,501 ஆப்களை ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இதுபோல முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ்கள் மூலமாக டேட்டா பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த அபாயம் எழும் என்ற விஷயமே பயனாளர்களுக்கு தெரியவில்லை என்று கண்டறியப்பட்டது.
சைபர் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிற ஆப்பிள் நிறுவனமும் கூட, சைபர் பாதுகாப்பு தொடர்பான சவால்களை அவ்வபோது எதிர்கொள்கிறது. உதாரணத்திற்கு, சில பாதுகாப்பு குறைபாடுகளால் சைபர் மோசடியாளர்களின் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதை எதிர்கொள்ள ஓஎஸ் தளத்தை அப்டேட் செய்யுமாறும் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு பயனாளர்களை அறிவுறுத்தியது.
BharOS பாதுகாப்பு
BharOS தளத்தில் சைபர் பாதுகாப்பு குறித்த பரிசீலனைகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இன்ஸ்டாசேஃப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சந்தீப் குமார் பாண்டா கூறுகையில், “ஸ்மார்ட் சாதனங்களுக்கான பாதுகாப்பு போர்வை போல BharOS செயல்படும். எந்தவொரு மால்வேர் தாக்குதலையும் தடுக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆப் இன்ஸ்டால் செய்யப்படும்போதும் லைவ்-வாக பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் வகையிலும் BharOS வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Scam, Technology