ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி பேரின் தகவல்களை விற்ற ஹேக்கர்!

வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி பேரின் தகவல்களை விற்ற ஹேக்கர்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து,எகிப்து ஆகிய நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்துள்ளதாக தகவல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி செல்போன் எண்களை விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சைபர் நியூஸ் என்ற நிறுவனம் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து,எகிப்து ஆகிய நாடுகளின் தரவுகளை ஹேக்கர் ஒருவர் விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 48 கோடியே 70 லட்சம் பேரின் செல்போன் எண்கள் விற்கப்பட உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி எங்களிடம் உணவு ஆர்டர் செய்ய முடியாது... இந்தியாவில் அமேசான் அதிரடி முடிவு!

ஒட்டுமொத்த அமெரிக்க பயன்பாட்டாளர்களின் செல்போன் எண்கள் மிகவும் மலிவாக 5 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 220 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலிபாதுகாப்பானது என மெட்டா நிறுவனம் கூறி வரும் நிலையில், இந்த ஹேக்கிங் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

First published:

Tags: WhatsApp