Home /News /technology /

உங்கள் தினசரி நெட்பேக் லிமிட் முடிந்துவிட்டதா? - சிறப்பான டேட்டா பூஸ்டர் ரீசார்ஜ் பேக்குகளை தெரிந்து கொள்ளுங்கள்...

உங்கள் தினசரி நெட்பேக் லிமிட் முடிந்துவிட்டதா? - சிறப்பான டேட்டா பூஸ்டர் ரீசார்ஜ் பேக்குகளை தெரிந்து கொள்ளுங்கள்...

டேட்டா பூஸ்டர் ரீசார்ஜ்

டேட்டா பூஸ்டர் ரீசார்ஜ்

Data booster packs: வோடபோன் ஐடியா நிறுவனத்திலும் ரூ.19 தொடங்கி ரூ.108 வரையிலும் வெவ்வேறு விலைகளில் டேட்டா பேக் வழங்கப்படுகிறது என்றாலும்கூட, அவையெல்லாம் குறைந்த டேட்டா அளவு கொண்டவை.

ஒரு மாதமே ஆனாலும் கூட ஒரு ஜிபி டேட்டாவை வைத்து காலம் ஓட்டிய நாளெல்லாம் இப்போது இல்லை. ஒரு நாளைக்கு 1 ஜிபி, 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டாலும் கூட இன்றைய இன்டர்நெட் தேவைக்கு அது போதுமானதாக இல்லை.

எப்படியாவது தினசரி வழங்கப்படும் டேட்டா லிமிட்க்கு உள்ளாக பிரவுசிங் செய்பவர்களுக்கு எந்தவித சிக்கலும் கிடையாது. ஆனால், தினசரி லிமிட் முடிந்துவிட்டால் அடுத்து ஏதேனும் முக்கியமான தகவல் அல்லது வீடியோ அல்லது ஆன்லைன் கேம் என எதைச் செய்ய முயன்றாலும் நாம் பொறுமையின் உச்சத்தையே கடக்க வேண்டியிருக்கும். டேட்டா பேக் முடிந்தபிறகு இன்டர்நெட் வேகம் அந்த அளவுக்கு ஸ்தம்பித்து நிற்கும்.

இப்படி சிக்கலான சமயங்களில் நமக்கு கை கொடுப்பதாக அமைவது பூஸ்டர் டேட்டா பேக் திட்டங்கள்தான்.

ஏர்டெல், ஐடியா வோடபோன், ஜியோ என நீங்கள் எந்த நெட்வொர்க்கில் இருந்தாலும் எத்தனை ரூபாய்க்கு பூஸ்டர் பேக் ரீசார்ஜ் செய்தால், எவ்வளவு பலன் கிடைக்கும் என்ற விவரங்களை இந்த செய்தியின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் டேட்டா பூஸ்டர் பிளான்ஸ்

ஏர்டெல்லில் ரூ.58க்கு ரீசார்ஜ் செய்தால் அதில் 3ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவே ரூ.98க்கு ரீசார்ஜ் செய்தால் 5 ஜிபி டேட்டா உடன், விங்க் மியூசிக் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதற்கு அடுத்து 98, 108, 118, 148 ஆகிய கட்டணங்களில் டேட்டா பேக் திட்டங்கள் உள்ளன என்றாலும் கூட, அதில் 12 ஜிபி, 15 ஜிபி என குறைந்த அளவிலேயே டேட்டா கிடைக்கிறது. எனினும் ரூ.301க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்கள் வேலிடிட்டி காலம் முழுமைக்கும் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.

இதையும் படியுங்கள்  :  போஸ்ட் ஆபீஸ் அப்டேட் ... அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

ஜியோ டேட்டா பூஸ்டர் பிளான்ஸ்

நான்கு விதமான பூஸ்டர் பேக் திட்டங்களை ஜியோ வழங்குகிறது. ஒரு ஜிபி டேட்டா 15 ரூபாய்க்கும், 2 ஜிபி டேட்டா 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதேபோன்று ரூ.61 முதல் ரூ.121 வரையிலான கட்டணங்களில் டேட்டா பேக் திட்டங்களை ஜியோ வழங்குகிறது. எனினும், கூடுதல் டேட்டா வேண்டும் என்பவர்களுக்காக அதிக கட்டணங்களில் டேட்டா பேக்குகளை ஜியோ வழங்குகிறது. ஆனால், அவற்றின் வேலிடிட்டி 30 நாட்கள் மட்டுமே. முந்தைய வேலிடிட்டியுடன் இது சேராது. ரூ.181 - 30 ஜிபி டேட்டா, ரூ 241 - 40 ஜிபி டேட்டா, ரூ.301 - 50 ஜிபி டேட்டா என வழங்குகிறது.

இதையும் படியுங்கள்  :  போஸ்ட் ஆபீஸ் பேங்கில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

வோடபோன் ஐடியா பூஸ்டர் பிளான்ஸ்

வோடபோன் ஐடியா நிறுவனத்திலும் ரூ.19 தொடங்கி ரூ.108 வரையிலும் வெவ்வேறு விலைகளில் டேட்டா பேக் வழங்கப்படுகிறது என்றாலும்கூட, அவையெல்லாம் குறைந்த டேட்டா அளவு கொண்டவை. அதுவே ரூ.298க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவும், ரூ.418 க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Airtel, BSNL, Jio, Recharge Plan

அடுத்த செய்தி