Home /News /technology /

குறைந்த பட்ஜெட்டில் அசத்தல் அம்சங்களுடன் கூடிய Smart Tv வாங்கணுமா? இதோ புது ரிலீஸ் வரப்போகிறது!

குறைந்த பட்ஜெட்டில் அசத்தல் அம்சங்களுடன் கூடிய Smart Tv வாங்கணுமா? இதோ புது ரிலீஸ் வரப்போகிறது!

Daiwa Smart TV

Daiwa Smart TV

Daiwa Smart TV Series: இதில் கிளவுட் டிவி வாய்ஸ் அசிஸ்டன்ட் கூடிய ஸ்மார்ட் வசதியும் உள்ளது. இந்த சிறப்பு அம்சத்தை பயன்படுத்தி தங்கள் குரலின் மூலம் டிவியை இயக்க செய்யலாம்.

புது புது பொருட்களை வீட்டிற்கு வாங்கி போட வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் உள்ளது. குறிப்பாக டிஜிட்டல் முறையில் அட்வான்ஸ் ஆகியுள்ள ஸ்மார்ட் டிவி, வாஷிங் மிஷின், ஸ்மார்ட் பிரிட்ஜ் போன்றவற்றை வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலம் மாற மாற இது போன்ற டிஜிட்டல் பொருட்களின் வரவும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மக்கள் தங்களின் பட்ஜெட்டுக்குள் இது போன்ற சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அதே போன்று அந்த பொருளுக்கு வாரண்ட்டி, தரமான தயாரிப்பு ஆகியவற்றை பற்றியும் யோசிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது பட்ஜெட்டுக்குள் வாங்க கூடிய ஸ்மார்ட் டிவி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்திய மின்னணு பிராண்டான Daiwa நிறுவனம் திங்கட்கிழமை அன்று இந்திய சந்தையில் கிளவுட் மூலம் இயக்கப்படும் இரண்டு HD ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியது. இவை 32 இன்ச் ஸ்மார்ட் டிவியாக வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.11,990 மற்றும் ரூ.12,490 ஆக உள்ளது. மேலும் இதில் 39 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.17,990 மற்றும் ரூ.18,490-க்கும் பெற்று கொள்ளலாம். இந்த இரண்டு டிவிகளுக்கும் ஒரு வருட வாரன்ட்டி உள்ளது மற்றும் கூடுதல் ஒரு வருட வாரன்ட்டியும் வழங்கப்படுகிறது.

Also read:  அமேசானில் ஐபோன் 13 மினி மீது ரூ.15,250 ஆஃபர்; வாங்குவது எப்படி?

இந்த புதிய ஸ்மார்ட் டிவியானது டிஸ்னி+, ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலைவ், சன் NXT போன்ற பிரபலமான ஓடிடி தளங்களுடன் வருகின்றது. மேலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த, அனைத்து Daiwa ஸ்மார்ட் டிவிகளிலும் அதிகாரப்பூர்வ அமேசான் பிரைம் வீடியோ செயலியும் வழங்குகின்றனர். இதன் மூலம் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம். இவற்றுடன் நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் பிற சேவைகள் மற்றும் OTA புதுப்பிப்புகளும் வரவுள்ளது. இவை அனைத்துமே மக்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட் விலைக்குள் அடங்குவதால் பல தரப்பினரை இது நிச்சயம் கவரும் என்று டிவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் மூவி பாக்ஸிற்கான பிரத்யேக பட்டன்களுடன் வரவுள்ளது. அதே போன்று இந்த ஸ்மார்ட் டிவிகள் புதிய ஸ்மார்ட் ரிமோட்டுடன் வருகின்றன. இதில் கிளவுட் டிவி வாய்ஸ் அசிஸ்டன்ட் கூடிய ஸ்மார்ட் வசதியும் உள்ளது. இந்த சிறப்பு அம்சத்தை பயன்படுத்தி தங்கள் குரலின் மூலம் டிவியை இயக்க செய்யலாம். இந்த வகையில் இதன் மைக்குடன் கூடிய வாய்ஸ் ரிமோட்டுடன் வருகிறது.

Also read:  எலெக்ட்ரிக் வெஹிகிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பொது சேவை மையங்களுடன் கூட்டு சேர்ந்த MEML நிறுவனம்.!

இவற்றுடன் சினிமா மோட், A+ கிரேடு பேனல், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் மற்றும் 16.7 மில்லியன் வண்ணங்களை கொண்ட புதிய அம்சங்களும் உள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 20W ஸ்டீரியோ சரவுண்ட் ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளது. அதே போன்று 39 இன்ச் ஸ்மார்ட் டிவியானது சரவுண்ட் சவுண்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. 1 ஜிபி RAM மற்றும் 8 ஜிபி ROM, ஆண்ட்ராய்டு 9.0 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஏ-53 குவாட்-கோர் புராஸசருடன் வருகிறது.
Published by:Arun
First published:

Tags: Gadgets, Smart tv, Technology

அடுத்த செய்தி