முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வீட்டிலிருந்து அலுவலகப் பணி... கேள்விக்குறியாகும் சைபர் பாதுகாப்பு!

வீட்டிலிருந்து அலுவலகப் பணி... கேள்விக்குறியாகும் சைபர் பாதுகாப்பு!

ஹேக்கிங் (மாதிரிப்படம்)

ஹேக்கிங் (மாதிரிப்படம்)

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் இணையதளம், ஈமெயில் முகவரி எனப் பலவும் ஹேக் செய்யப்பட்டு வருகிறதாம்.

  • Last Updated :

கோடிக்கணக்கானோர் இன்று வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழல் சைபர் பாதுகாப்பைக் கேள்விகுறியாக்கும் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து பணியாற்றும் போது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தத்தமது இணைய இணைப்பு மூலம் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தினுள் நுழைவர். இதுபோன்ற சூழலில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த அந்நிறுவனத்தின் இணைய தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளது.

இத்தகைய சூழலில் ஹேக்கர்கள் எந்தவொரு இணைய பக்கத்தையும் எளிதாக ஹேக் செய்யவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சைபர் பாதுகாப்புத் துறையினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். அளவுக்கு அதிகமானோர் பயன்படுத்துவதால் குற்றம் நடப்பதை தவிர்க்கவும் முடியாது. பாதுக்காப்பும் தர முடியாது என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது ஹேக்கர்களின் இம்சைகள் தொடங்கிவிட்டதாம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் இணையதளம், ஈமெயில் முகவரி எனப் பலவும் ஹேக் செய்யப்பட்டு வருகிறதாம்.

மேலும் பார்க்க: 5ஜி, 108 மெகாபிக்சல் கேமிரா... அசத்த வருகிறது ஜியோமியின் Mi 10!

First published:

Tags: Cyber attack, Work From Home