அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பயன்படுத்தும் வகையில் ICICI வங்கியின் புதிய செயலி அறிமுகம்...!
அனைத்து வங்கி வாடிக்கையாளரும் பயன்படுத்தும் வகையில் ICICI வங்கியின் புதிய செயலி அறிமுகம்...!
ஐ.சி.ஐ.சி.ஐ
அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே செயலி மூலம் மேற்கொள்ளும் வசதியை இந்தியாவிலேயே முதன்முறையாக தாங்கள் மட்டுமே மேற்கொண்டிருப்பதாகவும் ஐசிஐசிஐ பெருமிதம் தெரிவித்துள்ளது.
ICICI வங்கி அறிமுகப்படுத்தியுள்ள iMobile Pay என்ற புதிய செயலி மூலம் பிற வங்கிகளின் வாடிக்கையாளரும் பணப் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, மொபைல்போன் வாயிலாக பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான iMobile pay என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ மொபைல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த செயலில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர் மட்டுமின்றி இதர வங்கியின் வாடிக்கையாளர்களும் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட UPI ஐடி வைத்திருப்பவர்களும் இந்த செயலியில் பதிவு செய்துவிட்டு பணப்பரிமாற்றத்தை செய்யலாம். இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் அனூப்பக்சி கூறும்போது, 'இந்தியாவிலேயே முதன்முதலாக மொபைல் பேங்கிங் செயலியை 2008ம் ஆண்டு நாங்கள்தான் அறிமுகப்படுத்தினோம். அண்மை காலமாக, எங்களின் ஐ மொபைல் செயலியை ஐசிஐசிஐ வாடிக்கையாளர் அல்லாதாரும் பயன்படுத்தி வருவதை உணர்ந்தோம். மேலும், சில சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் பல்வேறு செயலிகளை பயன்படுத்துவதையும் கண்டுபிடித்தோம்.
அதனடிப்படையில் ICICI வங்கியின் புதிய செயலியில் சில மாற்றங்கள் செய்து iMobile pay என்ற புதிய செயலியை உருவாக்கியிருக்கிறோம். இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள iMobile pay-ல் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கும். இந்தச் செயலியில் வேகமாகவும், அதேநேரத்தில் பாதுகாப்பாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.
அனைத்து வங்கி சேவைகளையும் ஒரே செயலி மூலம் மேற்கொள்ளும் வசதியை இந்தியாவிலேயே முதன்முறையாக தாங்கள் மட்டுமே மேற்கொண்டிருப்பதாகவும் ஐசிஐசிஐ பெருமிதம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் முதலில் iMobile pay செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட UPI id-யை கொண்டு லாகின் செய்ய வேண்டும். அதற்கடுத்தபடியாக qr code scanning, mobile number, account details ஆகியவைக் கொண்டு பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.
ஐ மொபைல் பே, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை சேர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கிறது. வரும் காலங்களில் utility bill payment, mobile recharges, CIBIL score checking, investments and travel bookings - ஆகிய சேவைகளை மேற்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.