ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்பை குறிவைக்கும் ஹேக்கர்கள்.. உடனே அப்டேட் செய்யுமாறு யூசர்களுக்கு அறிவுரை.!

வாட்ஸ்அப்பை குறிவைக்கும் ஹேக்கர்கள்.. உடனே அப்டேட் செய்யுமாறு யூசர்களுக்கு அறிவுரை.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | இரண்டு விதமான வாட்ஸ்அப் செயலிகளிலும் பழைய வெர்ஷனை இன்னமும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால் உடனடியாக புதிய வெர்ஷனை அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்த நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் integer overflow எனப்படும் ஹேக்கிங் முறையில் இருந்து தப்பிக்க வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் பிசினஸ் ஆகிய இரண்டு விதமான வாட்ஸ்அப் செயலிகளிலும் பழைய வெர்ஷனை இன்னமும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால் உடனடியாக புதிய வெர்ஷனை அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் வாட்ஸ்அப்பின் V2.22.16.12 என்ற வெர்ஷன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வாட்ஸ்அப் பிசினஸின் v2.22.16.12, iOS இயங்குதளத்தின் வாட்ஸ் v2.22.16.12, iOS இயங்குதளத்தின் வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷன் v2.22.16.12. மேற்கூறிய இந்த வெர்ஷன்களை தவிர இதற்கு முந்தைய பழைய வாட்ஸ்அப் செயலியின் வெர்ஷன்களை பயன்படுத்தும் அனைவரும் இந்த integer overflow எனப்படும் முறையில் ஹேக்கர்களால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ரிமோட் கோட் எக்ஸிகியூஷன் எனும் முறையில் ஹேக்கர்கள் உங்களது வாட்ஸ் அப் அல்லது நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் எந்த ஒரு டிவைசையும் தூரத்திலிருந்து ஒரு ரகசிய கட்டளை மூலம் இயக்கவும் உங்களது தகவல்களை முழுமையாக திருடிக் கொள்ளவும் முடியும். வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டில் இந்த ஹேக்கிங் அட்டாக்கை மேற்கொள்ள முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பழைய வெர்ஷன்களில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமையால் அவை மிக எளிதாக இந்த புதிய ஹேக்கிங் முறையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

RCE எனப்படும் இந்த ரிமோட் கோட் எக்ஸிகியூஷன், பெரும்பாலும் நாம் ஏதேனும் பாதுகாப்பாற்ற வலைதளங்களில் இருந்து பாதுகாப்பற்ற டேட்டாக்கள் அல்லது கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது, இந்த வைரஸ் போன்ற கோப்புகள் அந்த கோப்புகளோடு சேர்ந்து நமது கணினி அல்லது மொபைலுக்குள் நுழைந்து விடுகின்றன. அதன் பின் திரையில் தோன்றாமல் மறைமுகமாக இயங்க தொடங்கும் வைரஸ், அந்த கோப்பை உருவாக்கிய ஹேக்கர்களுக்கு தூரத்திலிருந்து உங்களது மொபைல் அல்லது கணினியை கண்காணிக்கவும், கட்டளைகள் கொடுத்து அவற்றை இயக்கவும் வழிவகை செய்கிறது.

Also Read : 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன.?

சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த புதிய வைரஸ் அல்லது ஹேக்கிங் முறைக்கு CVE -2022-36934 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடைய அபாயத் தன்மை அளவிட்டில் 10 க்கு 9.8 என்று மிக அபாயகரமான CVE அளவீட்டை பெற்றுள்ளது. இந்த CVE scale என்பது கணினியை தாக்கும் வைரஸின் அபாய தன்மையை அளவிட பயன்படுத்தும் ஒரு அளவீடு ஆகும். சில சமயம் ஹேக்கர்கள் வீடியோ முறையிலும் ஒரு பைலை உங்களது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி அதன் மூலம் உங்களது வாட்ஸ் அப்பை ஹேக் செய்ய முடியும்.

Also Read : வாட்ஸ்அப் காலில் இனி இது இருக்காதா.? விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அப்டேட்டில் இந்த இரண்டு பாதுகாப்பு குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட்டில் ஒரே சமயத்தில் 32 நபர்கள் சேர்ந்து வீடியோ கால் பேசும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Hacking, Technology, Whatsapp Update