இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் திருவிழா!

இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் திருவிழா!
  • News18
  • Last Updated: February 18, 2020, 1:33 PM IST
  • Share this:
கடந்த சில ஆண்டுகளில் நாம் கற்றுக்கொண்டுள்ள ஒரு விஷயம், இந்திய மொபைல் ஃபோன் வரலாறு இன்னும் பெருமளவு வளரவிருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களுடைய எண்ணிக்கை ஒவ்வோராண்டும் மிக விரைவாக வளர்ந்துவருகிறது, இந்தியா உலகில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக வளர்கிறது.

தற்போது சந்தையில் உள்ள அனைத்துக் கருவிகளையும் கவனித்துப் பார்த்தால், அவற்றுள் மிகப்பெரும்பான்மையானவை தங்களுடைய சிறப்பம்சங்கள் பட்டியலில் ஒன்றாகக் கொரில்லா கிளாஸ் கிரிஸ்டலைக் குறிப்பிடுகின்றன. கார்னிங் தயாரிக்கும் இந்தக் கண்ணாடி, ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாட்டில் அடிக்கடி நிகழ்கிற கீறல்கள், இடிப்புகளிலிருந்து அவற்றின் திரைகளைப் பெரிதும் பாதுகாக்கிறது.

உண்மையில், இந்தப் படிகங்கள் தற்போது மிகவும் புகழ்பெற்றுவிட்டன, இதற்குச் சான்றாக, ஏழு பில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளின் வடிவமைப்பில் இந்தக் கண்ணாடி சேர்க்கப்பட்டுள்ளதாகக் கார்னிங் தெரிவிக்கிறது. ஆகவே இந்தப் பிரிவில் கார்னிங் பேரரசராக உள்ளது. இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ள இந்தியா, தொழில்நுட்ப விஷயங்களை விரும்புகிறது, புத்தாக்கங்களைக் கரம் விரித்து வரவேற்கிறது.


உலக அளவில் வேறு எந்தக் குறிப்பிடத்தக்க சந்தையிலும் இந்தியாவைப்போன்ற மிக விரைவான வளர்ச்சிப் பயணப்பாதை இல்லை; ஆகவே, ஸ்மார்ட்ஃபோன் தொழிலில் உள்ள யாருக்கும் இது ஒரு முக்கிய முன்னணிச் சந்தையாக உள்ளது. இந்தியாவில் 400 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ளார்கள், இந்த எண்ணிக்கை மேலும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

கொரில்லாக் கண்ணாடியைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான கார்னிங்கின் வேர்கள் புத்தாக்கத்தில் உள்ளன, வாய்ப்புகளை ஆர்வத்துடன் காண்கிற ஒரு நிறுவனம் அது, மிகச்சிறந்த இந்திய ஸ்மார்ட்ஃபோன் வாய்ப்புக்கு ஒரு தொலைநோக்குச் சிந்தனையைக் கொண்டுள்ளது.
இந்தத் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதி, கொரில்லாக் கண்ணாடியின் தகவல் வளத்தைக் கட்டமைத்தல், பயனாளர்கள் அதன் தயாரிப்புகளுடைய கடினத்தன்மையை அனுபவிக்கச் செய்தல். இந்தக் கோணத்தில் சிந்தித்துவரும் இந்நிறுவனம், சமீபத்தில் டெக்2 இன்னொவேட்டுடனான இணைந்து பணிபுரியவிருப்பதாக அறிவித்தது.இந்த மிகப்பெரிய விழாவானது, இந்திய இளைஞர்களுக்கான மிக முக்கியமான டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் திருவிழாக்களில் ஒன்றாகும். புது தில்லியில் பிப்ரவரி 14-15 நாட்களில் நடைபெறவிருக்கும் இந்த விழாவின் ஒரே நோக்கம்: நாளைய உலகை மாற்றக்கூடிய, இரைச்சலை உடைக்கக்கூடிய புத்தாக்கங்களை உருவாக்கும் உணர்வைத் தூண்டுவது.
கேட்ஜெட் விரும்பிகள், இசை உருவாக்குநர்கள், விளையாட்டு விரும்பிகள், இன்னும் பலருக்கான இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தின் முன்னணி ஆதரவாளர் கார்னிங்.

இதன்மூலம், எங்கெங்குமுள்ள இளம், திறமைசாலி மனங்களுடன் கார்னிங் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்வது மிகச்சிறப்பாகத் தெரியவருகிறது.
தொழில்துறைத் தலைவர்களுடைய முக்கியமான உரைகள், யூட்யூபர் நட்சத்திரங்கள், இன்ஸ்டாக்ராம் தாக்கமுண்டாக்கிகள், இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற டிக்-டாக்கர், இன்னும் பலருடனான கலகலப்பான அரட்டைகள், மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு, இந்த விழாவுக்கு வாருங்கள். இவர்களெல்லாம் டிஜிட்டல் கட்டுமானங்களின் உலகை உடைப்பார்கள், தவறான சிந்தனைகளை மாற்றிப் புரியவைப்பார்கள், ஆக்டேன் மிகுதியாகப் பரவும் இரண்டு நாள் PUBG மொபைல் போட்டியொன்றையும் நடத்துவார்கள்.

இவற்றுடன், கொரில்லாக் கண்ணாடித் தொழில்துறையின் பொது மேலாளர் ஜான் பாய்னெ, கார்னிங் கொரில்லாக் கண்ணாடியின் பிரிவு VP ஸ்காட் ஃபாரெஸ்டர் போன்ற அலுவலர்களைச் சந்திப்பதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இது.
ஒட்டுமொத்த விழாவிலும் நிறைந்துள்ள மற்ற விஷயங்கள், உங்களுக்குப் பிடித்த சமூக ஊடகப் புகழாளர்களுடன் பழகும் வாய்ப்புகள், மைதானங்களில் ஒவ்வொரு மணிநேரமும் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள், இன்னும் பல. வாருங்கள், பண்பாடு, தானியங்கியாக்கல், இயந்திரமனிதத் தொழில்நுட்பம் மற்றும் சில உண்மையிலேயே மிகச்சிறந்த இயந்திரங்களை அனுபவித்தபடி சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள், கேமெராக்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை வெல்லலாம்.

உங்கள் நுழைவுச்சீட்டுகளைப் பதிவுசெய்ய, இன்றே இங்கு க்ளிக் செய்யுங்கள்!
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்