பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய பேஸ்புக் அதிகாரிகள் - மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய பேஸ்புக் அதிகாரிகள் - மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம்
மார்க் ஜுக்கர் பெர்க்
  • News18
  • Last Updated: August 19, 2020, 11:55 AM IST
  • Share this:
அண்மையில் WALL STREET Journal-ல் வெளியான கட்டுரையை சுட்டிக் காட்டி இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கின் வெறுப்புணர்வு பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டும், அது பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படவில்லை என காங்கிரசின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பேஸ்புக்கின் கொள்கை ரீதியான முக்கிய பொறுப்பில் இருக்கும் அங்கிதா தாஸின் தலையீடே இதற்குக் காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Also read... கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திருப்பியவர்கள் ஒரு லட்சம் பேர் - அமைச்சர் பாண்டியராஜன்


பாஜக மட்டுமல்லாது சில இந்து அமைப்புகளுக்கு ஆதரவாகவும் பேஸ்புக் இந்தியா செயல்படுவதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
First published: August 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading