ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள்... அமேதியில் கொண்டாடத் தயாராகும் ராகுல் காந்தி!

ராகுல் காந்தி ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணைந்தார்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 7:10 PM IST
ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள்... அமேதியில் கொண்டாடத் தயாராகும் ராகுல் காந்தி!
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: July 11, 2019, 7:10 PM IST
ட்விட்டரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 10 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

இச்சாதனையைக் கொண்டாட ராகுல் காந்தி அமேதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். தொடர்ந்து அமேதி தொகுதியைக் கைக்குள் வைத்திருந்த காங்கிரஸிடம் இருந்து சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாஜக-வின் ஸ்மிருதி இராணி கைப்பற்றினார்.


Loading...ட்விட்டர் தளத்தில் தன்னை 10மில்லியன் பேர் பின் தொடர்வதைக் கொண்டாடும் விதமாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். இச்சாதனையை அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இணைந்தார். தற்போது அமேதியில் உள்ள ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் முதன்முறையாக தனது முன்னாள் தொகுதிக்கு வந்துள்ளார்.

மேலும் பார்க்க: 15 மில்லியன் இந்திய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கிய மால்வேர்!
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...