உங்கள் குழந்தை நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் திரையை பார்த்துக்கொண்டே இருப்பதாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கே நீங்கள் போனையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதை குறைக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? ஆம் எனில் உங்களுக்கான தீர்வை ஆப்பிள் ஐபோன்கள் தருகின்றன.
ஸ்க்ரீன் டைம் (screen time) குறைக்க வழி இருக்கா என்று தானே யோசிக்கிறீர்கள். நிஜமாகவே இருக்கிறது மக்களே. அதற்காகவே, ஆப்பிள் ஐபோன்களில் 'ஸ்கிரீன் டைம்' அம்சம் உள்ளது. இது நீங்கள் எவ்வளவு நேரம் செல்போனில் மூழ்கி இருக்கிறீர்கள் என்பதை கண்காணிக்கும்.
ஆப்பிள் செட்டிங் பக்கத்தின்படி , ஆப்ஸ், இணையதளங்கள் மற்றும் பல செயலிகளில் ஒருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதை ஸ்க்ரீன் டைம் தெரியப்படுத்துகிறது. இந்த வழியில், பயனர்கள் தங்கள் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்களே தெரிந்துகொள்ளலாம். எந்த செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இது ஆப்பிள் ஐபோனிகள் மட்டும் இல்லாமல் ஆண்ட்ராய்டு போன்களிலும் உள்ளது. உங்கள் ஐபோனில் ஆப்களுக்கான திரை நேரத்தை எவ்வாறு இயக்குவது என்பது இங்கே:
- உங்கள் ஆப்பிள் ஐபோனில் உள்ள Settings செல்லவும்
- அடுத்து, Screen Time க்ளிக் செய்யவும்
- இங்கே, Screen Time ஆன் செய்யவும். அதில் உங்கள் சாதனம் அல்லது உங்கள் குழந்தைகளது சாதனம் என்று பல ஆப்ஷன்கள் வரும். அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
Screen Time இயக்கப்பட்டதும், உங்கள் ஆப் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் காட்டும் அறிக்கை உங்களுக்கு காட்டப்படும். அடுத்து, தனிப்பட்ட பயன்பாடுகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்க விரும்பினால், Apple iPhone ஒரு 'ஆப் லிமிட்ஸ்'(App Limits) அம்சத்தைக் கொண்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், தனிப்பட்ட ஆப் பயன்பாட்டு வரம்புகளுடன் பயன்பாட்டு வகைகளுக்கான தினசரி வரம்புகளை நீங்கள் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் வேலையில் இருக்கும்போது வேலை சார்ந்த ஆப்களை மட்டும் பார்க்க அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். அந்த நேரத்தில் சமூக ஊடகம், கேம் ஆப்களை பார்க்க முடியாதபடி கட்டுப்பாடுகளை அமைத்துக்கொள்ளலாம். ஆப்ஸ் வரம்புகள் ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும், மேலும் எந்த நேரத்திலும் அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
பயன்பாட்டு வரம்புகளை அமைக்க:
- Settings சென்று Screen Time செல்லவும்
- இங்கே, App Limits option என்பத க்ளிக் செய்து செயலிகளை சேர்த்துகொள்ளவும்
- பின்னர் உங்கள் விருப்பப்படி அந்தந்த நேரத்தில் பார்க்க விரும்பும் ஆப் பயன்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- வாரத்தின் எத்தனை நாட்கள் இந்த கால வரம்பு மற்றும் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வார வேலை நாட்களுக்கு தனி கட்டுப்பாடு, வார இறுதிக்கு கட்டுப்பாடு என்று நிர்ணயித்து கொள்ளலாம்.
இதன் மூலம் உங்கள் திரை நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதோடு, வேலை நேரத்திலும், படிக்கும் நேரத்திலும் கவனம் சிதறாமல் இருப்பதாய் உறுதி செய்ய முடியும். அதே போல குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விளையாட்டு ஆப்கள் வழங்கும் பழக்கத்தை எளிதாக கொண்டுவர இது உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple IOS, Apple iphone