Home /News /technology /

பழைய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி உபயோகிப்பது நல்லதா?

பழைய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி உபயோகிப்பது நல்லதா?

மறு மேம்பாடு செய்யப்பட்ட பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பற்றிய முழு விவரம்.

மறு மேம்பாடு செய்யப்பட்ட பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பற்றிய முழு விவரம்.

Refurbished electronics : மறு மேம்பாடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. முமு விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பொதுவாக எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குவது என்று முடிவு செய்த பிறகு, அந்த பொருளின் விலை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, சிலர் முழு பணம் செலுத்தி வாங்குவதற்கு முன் வருவார்கள். சிலர் ஈஎம்ஐ முறையில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதுபோல், சந்தையில் இதற்கு முன்பு பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மேம்பாடு செய்து விற்பனை செய்வது ஒரு தொழிலாக இருந்து வருகிறது.

  தற்போது பிராண்டட் நிறுவனங்களே தங்களது பழைய பொருட்களை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கி, அவற்றை மறு மேம்பாடு செய்து மீண்டும் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றன. இப்படி மறு மேம்பாடு செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதால் நமக்கு லாபம் உண்டா? அவை பாதுகாப்பானதா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

  வாரண்டி கிடைக்கும்:

  தற்போது நிறுவனங்கள் சார்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் மறு மேம்பாடு செய்யப்படுவதால் அவற்றின் தரத்திற்கும், செயல் திறனுக்கும் எந்தவித குறைபாடும் இருக்காது. அதே சமயம் நமக்கு வேண்டிய வாரண்டியும் கிடைக்கும்.

  மறு மேம்பாடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை சந்தை வேகமாக வளர்ந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாலும், குறைவான விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க முடியும் என்பதே அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று எக்ஸ்ட்ரா கவர் என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சௌமித்ரா குப்தா தெரிவித்தார்.

  இது குறித்து அவர் கூறுகையில், “இன்றைய தினம் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு ஒர்க் ஃபிரம் ஹோம் பணி முறை அதிகரித்து இருக்கிறது. இதனால் பலரும் வீட்டிலிருந்தே பணி செய்யத் தொடங்கியுள்ள நிலையில், கம்ப்யூட்டர், மோடம் ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி பணவரவு குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் மறு மேம்பாடு செய்யப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

  Also Read : 2000க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் - இது தான் காரணம்.!

  சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

  பயன்படுத்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நாம் தூக்கி எறிவதன் மூலமாக, இ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள் சுற்றுப்புறப் பகுதிகளில் குவிந்து விடுகின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ரீசைக்கிள் செய்வதற்கான செயல் திறன் குறைவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மாபெரும் அளவுக்குச் சேரும் அந்த கழிவுகளை மேலாண்மை செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் எலக்ட்ரானிக்ஸ் கேட்கட்ஸ் தயாரிக்க மிக அரிதான தாதுகளைப் பயன்படுத்துவதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களை முடிந்த மட்டும் நீண்ட நாட்களுக்கு அல்லது மீண்டும் மேம்பாடு செய்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும்.

  பணம் சேமிக்கப்படும்:

  புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஒன்றை ஒப்பிடுகையில், மறு மேம்பாடு செய்யப்பட்ட பொருள் ஒன்றின் விலை பாதிக்கும் குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் பணத்தை ஏராளமாகச் சேமிக்கலாம். நல்ல சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மறு மேம்பாடு செய்யப்படுவதால் அவை பெரும்பாலும் செயல் இழக்காது.

  உத்தரவாதம் கிடைக்கும்:

  பொருட்களின் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் சார்பில் அவை மறு மேம்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது, வாடிக்கையாளர்களின் நலன் கருதி வாரண்டி கொடுக்கின்றனர். இதனால் அந்த பொருளை வாங்குவதற்கான நம்பிக்கை அதிகரிக்கிறது. பொருள் செயல் இழந்து விடுமோ என்ற அபாயங்கள் குறைகின்றன.

  டெக்னாலஜி அப்டேட்:

  எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மறு மேம்பாட்டை பொருத்தவரையில் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் ஆகிய இரண்டும் அப்டேட் செய்யப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்கக்கூடிய புதிய பிராண்ட் ஒன்றுக்கு இணையாக இந்த பொருட்கள் இருக்கின்றன.
  Published by:Janvi
  First published:

  Tags: Fridge, Sales, Smartphone, Washing Machine

  அடுத்த செய்தி