Chandrayaan 2: லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சிவன்

News18 Tamil
Updated: September 7, 2019, 3:33 AM IST
Chandrayaan 2: லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.. இஸ்ரோ தலைவர் சிவன்
News18 Tamil
Updated: September 7, 2019, 3:33 AM IST
நிலவில் தரையிறங்கும் சமயத்தில், சுமார் 2.1 கிமீ உயரத்தில் இருக்கும்போது லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்த நிலையில், செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.


சந்திரயான் 2 திட்டத்தின் முக்கியமான லேண்டர் தரையிறங்கும் நிகழ்வானது இன்று அதிகாலையில் நடந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கிமீ உயரத்தில் வரும் போது லேண்டரின் தரைத்தளத்துடனான சிக்னல் தொடர்பு துண்டானது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து லேண்டர் தரையிறக்கத்தை கவனித்து வந்த விஞ்ஞானிகள் மிகுந்த கவலைக்குள்ளாகினர். அங்கு விஞ்ஞானிகளுடன் இருந்த பிரதமர் மோடி அவர்களை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.

Watch Also:

Loading...

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...