கடந்த சில நாட்களாக கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் குறித்த பேச்சு ஸ்மார்ட்போன் சந்தையில் உலா வந்துக் கொண்டிருக்கிறது. கோகோ கோலா நிறுவனமே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்கிறதா எனவும் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். ஆனால் உண்மை அது இல்லை. கோகோ கோலா பாட்டிலின் டிசைனில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். ஸ்பெஷல் எடிசனாக இந்த போன் வெளிவர உள்ளது.
Realme 10 Pro Coca-Cola எடிஷன் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது ரியல்மி நிறுவனம். புதிய ஸ்பெஷல் எடிசன் போனின் டிசைன் மற்றும் ஃபியூச்சர்ஸ் உள்ளிட்ட விபரங்களுடன் அதன் புகைப்படமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய Realme 10 Pro ஸ்மார்ட்போனின் பின்புறம் தனித்துவமான கோகோ கோலா பிராண்டிங் மேட் பிளாக் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் சிவப்பு நிறத்துடன் கோகோ கோலா நிறுவனத்தின் பெயரும், வலது புறத்தில் மேட் பிளாக் நிறத்தில் ரியல்மி நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேல் வலது புறத்தில் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு கேமராவின் விளிம்புகளை சுற்றிலும் கொக்கக் கோலாவின் சிவப்பு நிற வண்ணத்தில் நிரப்பப்பட்டிருக்கிறது.
மேட் பிளாக் மற்றும் கொக்கக் கோலா நிறத்துக்கு நடுவில் ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் ஃப்ளாஷ் லைட் இடம்பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் பாக்ஸ் கோகோ கோலா தீம் உடன் இருக்கிறது. Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்னதாகவே அதன் புகைப்படம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Realme 10 Pro ஸ்மார்ட்போனின் கோகோ கோலா எடிஷன் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. Realme 10 Pro போன்றே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய போன், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 695 SoC உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் 108 மெகாபிக்சல் திறனுடன் ப்ரைம் கேமரா மற்றும் 2 எம்பி கொண்ட கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme 10 Pro Coca-Cola எடிஷன் ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இந்த புதிய ஸே்பெஷல் எடிசன் போனின் விலை 20ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோகோ கோலா எடிசன் போனின் வருகையை மொபைல் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RealMe, Smart Phone