விரைவில் வருகிறது Co-WIN App - போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்!
கோ-வின் செயலியில் ஐந்து தொகுதிகள் இருக்கும். நிர்வாகி (Administrator) , பதிவு (Registration), தடுப்பூசி (Vaccination), பயனாளி ஒப்புதல் (Beneficiary Acknowledgement) மற்றும் புகார் அல்லது கூடுதல் தகவல்களை சொல்லக்கூடிய (Report ) பகுதி ஆகிய 5 பிரிவுகள் இருக்கும்.

மாதிரி படம்
- News18
- Last Updated: January 8, 2021, 2:19 PM IST
கொரோனா வைரஸூக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அந்த தடுப்பூசி பற்றிய முழு தகவல்களை கொடுக்கும் Co-WIN செயலியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்நிலையில், ஆப் ஸ்டோர்களில் சில போலியான Co-WIN செயலிகள் உலா வருகின்றன. இது குறித்து எச்சிரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, அதிகாரப்பூர்வமான Co-WIN செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அந்த செயலிகளில் மக்களின் சுய தகவல்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. Co-WIN செயலி அறிமுகப்படுத்தப்படும்போது போதுமான அளவு விளம்பரம் அரசு கொடுக்கும் என விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த செயலிக்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. கோவிட் தடுப்பூசி பற்றியும், Co-WIN App பற்றியும் சில கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை : கொரோனா வைரஸூக்கு எதிராக இரண்டு கோவிட் தடுப்பூசிகளைப் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. Co-WIN App பயன்பாட்டு வந்த பின்னர், எந்த தடுப்பூசியை தேர்தெடுக்கலாம் என நோயாளிகளே முடிவெடுக்கலாமா? அல்லது நிலுவையில் இருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பொறுத்து முடிவெடுக்கப்படுமா? என்பது குறித்த தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை. Co-WIN App பயன்பாடு தொடர்பான முழுவிவரமும் அந்த செயலி அறிவிக்கப்படும்போது மட்டுமே தெரியவரும்.
போலியான Co-WIN செயலிகளை பதிவிறக்க வேண்டாம்;
அதிகாரப்பூர்வ Co-WIN செயலியை மத்திய அரசு விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கு முன்னர் போலி செயலிகளை பதிவிறக்க வேண்டாம். முக்கியமாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை அந்த போலி செயலிகளில் பதிவிட வேண்டாம். போலி செயலிகள் ஆப் ஸ்டோர்களில் இருப்பதை கவனித்துள்ளதாகவும், அதனால் மக்கள் ஏமாற வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (MoHFW) கேட்டுக்கொண்டுள்ளது. Co-WIN செயலி தொடர்பாக போதுமான விளம்பரம் அரசு சார்பில் கொடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.Also read... பிற மெசேஜிங் ஆப்களை விட அதிக யூசர் டேட்டாக்களை சேகரிக்கும் WhatsApp, Facebook Messenger - ஆப்பிள் அறிக்கை!
Co-WIN செயலி எப்படி இருக்கும்?
கோ-வின் செயலியில் ஐந்து தொகுதிகள் இருக்கும். நிர்வாகி (Administrator) , பதிவு (Registration), தடுப்பூசி (Vaccination), பயனாளி ஒப்புதல் (Beneficiary Acknowledgement) மற்றும் புகார் அல்லது கூடுதல் தகவல்களை சொல்லக்கூடிய (Report ) பகுதி ஆகிய 5 பிரிவுகள் இருக்கும். தடுப்பூசிகளின் இருப்பு, எந்த வெப்பநிலையில் எங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, தடுப்பூசிகளின் தகவல்களை மக்களுக்கு அளிப்பதற்கு ஆகியவற்றுக்காக இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோ-வின் செயலி பயனர்களுக்கு எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க எப்போதும் நேரடி உதவி எண் (Helpline no) இருக்கும். மக்கள் அனைவரும் இந்த செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யும்போது பதிவு செய்வோரின் புகைப்படம் அவசியம் இருக்க வேண்டும். இந்த செயலியில் பதிவு செய்யக்கூடிய தகவல்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும், அரசுக்கும் உரிய சிகிச்சை அளிப்பதற்கான நடைமுறையை எளிதாக்குகின்றன.
தடுப்பூசி கிடைத்தவுடன் என்ன நடக்கும்?
கோவின் செயலியில் உள்ள தடுப்பூசி பகுதி (Vaccination module), நீங்கள் தடுப்பூசி பெற்றதற்கான தகவலை உறுதிப்படுத்தி, அதனை தடுப்பூசியின் நிலை குறித்த தகவலில் சேர்க்கும். பின்னர், Beneficiary Acknowledgement Module' - பகுதியில் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், கியூஆர் அடிப்படையிலான சான்றிதழ்களையும் உருவாக்கும். பின்னர், Co-WIN Report Module தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்ளும். இதன்மூலம் எத்தனைபேர் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளனர், எங்கிருந்து பயன்படுத்தியுள்ளனர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அரசிடம் அப்டேட்டாக இருக்கும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இந்நிலையில், ஆப் ஸ்டோர்களில் சில போலியான Co-WIN செயலிகள் உலா வருகின்றன. இது குறித்து எச்சிரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, அதிகாரப்பூர்வமான Co-WIN செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், போலி செயலிகளை பதிவிறக்கம் செய்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அந்த செயலிகளில் மக்களின் சுய தகவல்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. Co-WIN செயலி அறிமுகப்படுத்தப்படும்போது போதுமான அளவு விளம்பரம் அரசு கொடுக்கும் என விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த செயலிக்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. கோவிட் தடுப்பூசி பற்றியும், Co-WIN App பற்றியும் சில கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை :