சென்னை குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண புதிய செயலி அறிமுகம்!

செயலி மூலமாகக் குடிநீர் குறித்த புகார்களைச் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்குத் தெரிவிக்க முடியும். புகார் அளிக்கும் போது புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

news18
Updated: March 5, 2019, 5:50 PM IST
சென்னை குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண புதிய செயலி அறிமுகம்!
கோப்புப் படம்
news18
Updated: March 5, 2019, 5:50 PM IST
சென்னையில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் சிக்கலுக்குத் தீர்வு காணச் சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB) செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலமாகக் குடிநீர் குறித்த புகார்களைச் சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்குத் தெரிவிக்க முடியும். புகார் அளிக்கும் போது புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் புகார் அளிக்கும் போது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை அளிக்க வேண்டும். CMWSSB செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


சரியான விவரங்களை அளித்து புகார் தெரிவித்து, கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியா பதில் அளிக்கும் போது மட்டுமே புகார் பதிவு செய்யப்படும். புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு அது குறித்து எஸ்எம்எஸ் உறுதி தகவல் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

புகார் தெரிவித்த பிறகு அதன் தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களைப் பார்க்க முடியும். பொது மக்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த செயலியில் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம்.

மேலும் பார்க்க:

Loading...

First published: March 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...