• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கூகுள் பிளே ஸ்டோரில் க்ளப்ஹவுஸ் செயலி 2 மில்லியன் டவுன்லோட்ஸ்!

கூகுள் பிளே ஸ்டோரில் க்ளப்ஹவுஸ் செயலி 2 மில்லியன் டவுன்லோட்ஸ்!

க்ளப்ஹவுஸ்

க்ளப்ஹவுஸ்

இந்த செயலியில் ஒரு குழுவாக இணைந்து எந்த தலைப்பில் யார் வேண்டுமானாலும் உரையாடலாம்.

  • Share this:
ஆண்ராய்டு வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளப்ஹவுஸ் செயலி கூகுள் ப்ளேஸ்டோரில் 2 வாரத்தில் 2 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது

டிக்டாக், ஷேர் சார்ட் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோ தளங்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டன. அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் இருந்த இந்த செயலிகளின் மூலம் பலரும் தங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டினர். சினிமா பிரபலங்கள் முதல் கூலித் தொழிலாளி வரை அனைவரும் களம் கண்டதால், வீடியோ தளங்களுக்கான வரவேற்பு ஏகோபித்த அளவில் இருந்தது. இதற்கு அடுத்த வெர்சனாக ஆடியோ தளங்கள் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. கிளப் ஹவுஸ் எனப்படும் செயலி அதற்கான தொடக்கபுள்ளியை உருவாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த செயலியில் ஒரு குழுவாக இணைந்து எந்த தலைப்பில் யார் வேண்டுமானாலும் உரையாடலாம். வெளிநாடுகளில் ஆப்பிள் வெர்சன் மொபைல் போன்களுக்கு ஏற்ப இருந்த கிளப் ஹவுஸ் செயலி தற்போது ஆன்டிராய்டு வெர்சன்களுக்கு ஏற்பவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 18 ஆம் தேதி முதன்முதலாக கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அந்த செயலியின் பதிவிறக்கம் சுமார் 2 மில்லியனைக் கடந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கிளப்ஹவுஸ் செயலி நிறுவனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஏதாவதொரு தலைப்பில் பேசுவதற்கு அல்லது கருத்துகளை பகிர விரும்பும் ஒருவர் உரையாடலை ஏற்பாடு செய்யலாம். அவர் ஹோஸ்ட் என அழைக்கப்படுவார். எத்தனை பேர் வேண்டுமானாலும் கிளப் ஹவுஸ் உரையாடலில் பங்கேற்கலாம். ஹோஸ்ட் விரும்பும் நபர்கள் குழுவில் பேச முடியும். அவருக்கு மட்டுமே மற்றவர்களை பேச அனுமதிக்கும் உரிமை இருக்கும். தலைப்பில் உரையாடும் குழுவில் நீங்கள் விருப்பப்பட்டால் இணைந்து கொள்ளலாம், பிடிக்காத சமயத்தில் வெளியேறலாம். வீடியோ தளங்களுக்கு அடுத்தபடியாக ஆடியோ தளமான இந்த கிளப்ஹவுஸ் செயலி பிரபலமாகி வருகிறது. இதனடிப்படையிலேயே, டிவிட்டர் நிறுவனமும் 'ஸ்பேஸ்' என்பதை அறிமுகம் செய்துள்ளது. டிவிட்டர் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆடியோ அம்சத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Also read... Reliance Jio Recharge: மீண்டும் ஜியோ ரூ.98 பிளான் - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

பத்திரிக்கையாளர்கள், சினிமா விரும்பிகள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், இதன் மூலம் குழுவாக இணைந்து கலந்துரையாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோரும் கிளப் ஹவுஸ் தள உரையாடலில் பங்கேற்றனர். அவர்களின் பங்கேற்புக்கு பின்னரே கிளப் ஹவுஸ் செயலிக்கு உலகளவில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆன்ராய்டு 8 வெர்சன் மற்றும் அதற்கு பிந்தைய வெர்சன் மொபைல்களில் மட்டுமே கிளப் ஹவுஸ் செயலியை பயன்படுத்த முடியும். மொத்தம் 56 எம்.பி உள்ளது.

கிளப்ஹவுஸ்க்கு கிடைக்கும் வரவேற்புக்கு பின்னர் முகநூல் நிறுவனமும் ஆடியோ செயலியை முகநூலில் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: