ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வானவில்கள் எண்ணிக்கை! பாதிப்புகள் உண்டா?

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வானவில்கள் எண்ணிக்கை! பாதிப்புகள் உண்டா?

வானவில்

வானவில்

அதிக உயரத்தில் அமைந்துள்ள இடங்கள் மற்றும் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட இடங்களில் 'வானவில் நாட்கள்' அதிகரிப்பு என்பது அதிகம் உணரப்படும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

காலநிலை மாற்றம் இந்த பூமியின் இயக்கத்தை எவ்வளவு மாற்றும் என்று ஆண்டுதோறும் கருத்தரங்குகள் வைத்து உலகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாற்றங்கள் குறித்த ஆய்வுகளும் நடந்து கொண்டே இருக்கிறது. அது நன்மை தரக்கூடியதாக இருக்கலாம். கெடுதலாகவும் இருக்கலாம்.

மனோவாவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்களால் காலநிலை மாற்றத்தின் வெளிப்படையான விளைவுகளை கண்காணிக்கும் வகையில் ஒரு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வில் , ஆராய்ச்சியாளர்கள் குழு 2100 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் தோன்றும் வானவில்களின் எண்ணிக்கை சுமார் 5% அதிகரிக்கும் என்று கணக்கிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியானது இன்றைய உலகின் நிகழ்நேர படங்கள், உலகளாவிய காலநிலை தரவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாதிரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. 66 முதல் 79 சதவீத நிலப்பரப்புகளில் வானவில் தோன்றுவது அதிகரிக்கும் என்றும், 21 முதல் 34 சதவீதம் வரை குறைவான 'வானவில் நாட்கள்' காணப்படும் என்றும் தரவு காட்டுகிறது.

அண்டார்டிக்காவில் சுருங்கி வரும் ஓசோன் ஓட்டை..! விஞ்ஞானிகள் கணிப்பு

வானவில்

வானவில் என்பது பொதுவாக மழை வரும் நேரத்தில் உருவாகும்.

சூரிய ஒளி மற்றும் மழைப்பொழிவு ஆகியவை வானவில்லுக்கு இரண்டு முக்கியமான பொருட்கள் ஆகும். நீர்த்துளிகள் சூரிய ஒளியை ஒளிவிலகச் செய்யும்போது வானவில் உருவாகின்றன.

மனித நடவடிக்கைகள் கிரகத்தின் காலநிலை சமநிலையை மாற்றியமைத்துள்ளதால், இது மழைப்பொழிவு முறை மற்றும் மேக மூட்டத்தின் அளவுகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் அதிக உயரத்தில் அமைந்துள்ள இடங்கள் மற்றும் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட இடங்களில் 'வானவில் நாட்கள்' அதிகரிப்பு என்பது அதிகம் உணரப்படும் என்று ஆய்வுக்குழு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கடலைச் சுற்றியுள்ள காற்று சுழற்சி மற்றும் அதிக சூரிய ஒளி உள்ளே நுழைய அனுமதிக்கும் தெளிவான வானத்தால் சூழப்பட்ட மழை காரணமாக வரும் ஆண்டுகளில் வானவில்களைக் காண சிறந்த இடங்களாக தீவுகள் அமையும்.

பாதிப்பு என்பதை பொறுத்த அளவில் வானவில் என்பது வெறும் ஒளியாடல்தான். அதீத மழை என்பது வெள்ளத்தை ஏற்படுத்துமே தவிர வானவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் அதீத மழைதான் பூமியின் பூகோளத்தை மாற்றும் எனவும் தெரிவிக்கிறார்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Climate change