ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பூமியில் மட்டுமில்லை செவ்வாய் கிரகத்திலும் இந்தப்பிரச்னை நடந்திருக்காம்..! - ஆதாரங்களை அடுக்கும் விஞ்ஞானிகள்

பூமியில் மட்டுமில்லை செவ்வாய் கிரகத்திலும் இந்தப்பிரச்னை நடந்திருக்காம்..! - ஆதாரங்களை அடுக்கும் விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

ஹைட்ரஜனை உட்கொள்ளும் நுண்ணுயிரிகள் மீத்தேன் உற்பத்தி செய்து மேற்பரப்பிற்கு அடியில் பல அங்குல அழுக்குகளுடன் செழித்து வளர்ந்ததாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

காலநிலை மாற்றம் என்பது பூமியில் மட்டும் நடப்பதில்லை. எல்லா கிரகங்களிலும் நடக்கும் என்பதை நிறுவும் விதமாக சில ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆராய்ந்து வருகிறது. நேச்சர் ஆஸ்ட்ரோனமி இதழில் வெளியிடப்பட்ட இதன் ஆய்விவு முடிவுகளில், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் நுண்ணுயிரிகளுக்கு சாதகமான சூழலை வழங்கியிருக்கலாம்.

நுண்ணிய உப்பு-நிறைவுற்ற ரெகோலித் புற ஊதா மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு பௌதீக இடத்தை உருவாக்கியிருக்கும் என்று கூறுகிறது. ஆனால் அவற்றின் இருப்பு இப்போது இல்லை. அதற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்ற மலாலா யூசப்சாய் - எதற்கு தெரியுமா?

செவ்வாய் கிரகத்தின் பழங்கால நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தை மாற்றியமைத்து, கிரகத்தின் மீது ஒரு பனி போர்வையைத் தூண்டி, தங்களைத் தாங்களே மூடிக் கொண்டிருக்கக்கூடும் என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் முன்மொழிந்தனர். காலநிலை மாற்றம் கிரகத்தை பல நூற்றாண்டுகளுக்கு தரிசாக மாறுவதற்கான அறிகுறி இதுவாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

அடர்த்தியான, கீழ்நிலை வளிமண்டலத்தின் வெப்பநிலை, அதன் பரவல் அடர்த்தி ஆகியவை எளிய நுண்ணுயிர் உயிரினங்களை ஆதரித்திருக்கலாம். நுண்ணுயிரிகள் அந்த கிரகத்தில் இருந்த H2 மற்றும் CO2 ஐ உட்கொண்டு மீத்தேன் கழிவுகளை உற்பத்தி செய்திருக்கலாம். அதன் விளைவாக இன்றைய மீத்தேன் வளிமண்டலம் உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைக்கு கீழ் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரம் – விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.!

ஆராய்ச்சியாளர்கள் குழு சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் மேற்பரப்பில் இருந்த வாழ்விடத்தை மதிப்பிடுவதற்கு காலநிலை மற்றும் நிலப்பரப்பு மாதிரிகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து வருகிறது. ஹைட்ரஜனை உட்கொள்ளும் நுண்ணுயிரிகள் மீத்தேன் உற்பத்தி செய்து மேற்பரப்பிற்கு அடியில் பல அங்குல அழுக்குகளுடன் செழித்து வளர்ந்ததாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், ஆரம்பகால செவ்வாய் கிரகத்தில் ஈரமான, சூடான காலநிலை, இந்த மீத்தேன் வளிமண்டலத்தால் அழிந்திருக்கும். வெப்பநிலை வீழ்ச்சியால் உயிர்வாழும் முயற்சியில் ஈடுபட்டு பல உயிரினங்கள் புதைந்து அழிந்திருக்கும் என்பது தெரிகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Climate change, MARS, NASA, Research