யூசர்களின் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'லைட் மோட்' (Lite Mode) என்கிற கூகுள் க்ரோமின் அம்சம் விரைவில் "காணாமல் போகும்" என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம், இந்த லைட் மோட் அம்சம் ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு போன்களுக்கான கூகுள் க்ரோமில் அணுக கிடைக்கிறது. உலகம் முழுவதும் மொபைல் டேட்டாவின் விலை மலிவாகி விட்டதால் விரைவில் இந்த அம்சம் கூகுள் க்ரோமில் இருந்து நீக்கப்பட உள்ளது. மேலும் கூகுளின் அக்ஸலரேடட் மொபைல் பேஜஸ் (Accelerated Mobile Pages -AMP) முன்முயற்சியின் கீழ் இந்த லைட் மோட் முன்பு போல் பயனுள்ளதாக இல்லை என்பதும் இதன் நீக்கத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
வருகிற மார்ச் 29 ஆம் தேதி (2022) அன்று, க்ரோம் எம்100 வெர்ஷனின் (Chrome M100 version) வெளியீட்டுடன், ஆண்ட்ராய்டிற்கான கூகுள் க்ரோமில் காணப்படும் லைட் மோட் அம்சம் நிறுவனத்தால் "ஆஃப்" செய்யப்படும் என்று கூகுள் கூறி உள்ளது. அதாவது ஸ்டேபிள் சேனல்களில் (stable channels) வரவிருக்கும் க்ரோம் 100 வெளியீட்டில் லைட் மோட் அகற்றப்படும். இந்த மாற்றம், சற்றே பழைய கூகுள் க்ரோம் வெர்ஷனை பயன்படுத்தும் யூசர்களை மட்டுமின்றி லேட்டஸ்ட் கூகுள் க்ரோம் வெர்ஷனை பயன்படுத்தும் யூசர்களையும் 'தாக்கும்' என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : உங்கள் iPhone-ல் இருந்து பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களை மறைப்பது எப்படி?
கூகுள் க்ரோம்-ன் சப்போர்ட் மேனேஜர், “மார்ச் 29, 2022 அன்று, ஸ்டேபிள் சேனலில் க்ரோம் எம்100 வெளியிடப்பட்டவுடன், லைட் மோட்-ஐ நாங்கள் முடக்குவோம், இது ஆண்ட்ராய்டுக்கான ஒரு க்ரோம் அம்சம் ஆகும். இது மொபைல்கள் குறைவான மொபைல் டேட்டாவை பயன்படுத்தவும், வெப் பேஜ்களை வேகமாக லோட் செய்யவும் பயன்படுகிறது" என்று ஒரு பிளாக்போஸ்ட் வழியாக கூறி உள்ளார்.
விரைவில் முடக்கப்படவுள்ள, மொபைல் டேட்டாவை சேமிப்பதற்கான அம்சமான லைட் மோட் ஆனது தற்போது க்ரோம்-இன் செட்டிங்ஸ் பக்கத்திலில் உள்ள "அட்வான்ஸ்டு" பிரிவின் கீழ் அணுக கிடைக்கிறது. லைட் மோட்-இல் இருக்கும்போது, அது வெப் பேஜின் லோடிங் வேகத்தை விரைவுபடுத்தும், அதே நேரத்தில் மொபைல் டேட்டாவை சேமிக்கவும் செய்யும், இதன் பின்னணியில் கூகுள் சர்வர்கள் பயன்படுத்துகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : கூகுள் மேப் மூலமாக ஒருவரது லொகேஷனை டிராக் செய்வது எப்படி
ஹெவியான மற்றும் ஸ்லோவான பக்கங்களை அடையாளம் கண்டு க்ரோம் அதை, கூகுள் சர்வர்கள் வழியாக அனுப்பி அவற்றை கம்ப்ரெஸ் (compress) செய்யும். கூகுள் நிறுவனத்தின் சப்போர்ட் பேஜின்படி, இந்த லைட் மோட் அம்சத்தை பயன்படுத்தும் போது, சில யூசர்களின் வெப் டிராஃபிக் (web traffic) ஆனது அவர்களின் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்படுவதற்கு முன் கூகுள் சர்வர்கள் வழியாகச் செல்லலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த லைட் மோட் ஆனது கூகுள் க்ரோமின் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது. இருப்பினும் எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, கூகுள் க்ரோம் கேனரியில் (Google Chrome Canary) லைட் மோட் அம்சம் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை க்ரோம் பீட்டா (Chrome Beta) மற்றும் க்ரோம் ஸ்டேபிள் (Chrome stable) வெர்ஷன்களிலும் வரும் வாரங்களில் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.