இந்தியாவில் தீயாய் பரவும் "சிங்காரி" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்!

டிக்டாக் செயலிக்கு பதிலாக உள்நாட்டில் பயன்பாட்டிற்கு வந்த சிங்காரி செயலி கடந்த 3 மாதங்களில் 30 மில்லியன் நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீயாய் பரவும்
சிங்காரி
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 10:54 PM IST
  • Share this:
கேமிங் தவிர்த்த பிற செயலிகளில் உலக அளவில் அதிகமாக பதிவிறக்கப்படும் செயலியில் ஒன்று தான் சீன நிறுவனம் தயாரித்த "டிக்டாக்". கடந்த மே மாதம் மட்டும் 11 கோடியே 20 லட்சம் பேர் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டு இந்தியாவில் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு போட்டியாகச் சிங்காரி என்ற செயலியை பெங்களூரைச் சேர்ந்த புரோகிராமர்ஸான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் உருவாக்கினர்.

இந்த செயலியின் மூலம் வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி, நண்பர்களுடன் மெசெஜ் அனுப்பி சாட் செய்யவும் முடியும். அத்துடன் புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், இண்டர்நெட்டில் மற்றவற்றை தேடிப்பார்க்கவும் முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்களையும் உருவாக்கலாம்.

மேலும் செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றையும் எடுக்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலிக்கு இந்தியர்கள் மத்தியில் மிகபெரிய வரவேற்பு கிடைத்தது.


டிக்டாக் தடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். 3 மாதங்களில் 30 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதுகுறித்து சிங்காரி செயலியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுமித் கோஷ் கூறியதாவது, " சிங்காரி பயன்பாட்டின் எழுச்சி, நாங்கள் வழங்கும் மேம்பட்ட கருவிகளுடனும், சிங்காரி ஆப் வழங்கும் தடையற்ற படைப்பு அனுபவத்துடனும் நேரடி தொடர்பு உள்ளது.

மேலும் காட்சி விளைவுகளுக்கான சிறந்த இந்தியமயமாக்கப்பட்ட வடிப்பான்களுடன் அவற்றை மேம்படுத்துகிறோம் எனக் கூறினார். மேலும், செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு பணிபுரிய மேம்பட்ட முன் மற்றும் பின்புற கேமரா கருவிகளை வழங்க, AR (பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி) வடிப்பான்களைச் எங்கள் செயலியில் சேர்த்துள்ளோம்.

சிங்காரி புதிய மற்றும் தனித்துவமான ஏ.ஆர் வடிப்பான்கள் மற்றும் மக்கள் விரும்பும் சுவாரஸ்யமான வீடியோ எடிட்டிங் அம்சங்களுடன் அனைவரது கவனத்தை ஈர்க்க தயாராக உள்ளது" என்று கோஷ் கூறினார். தற்போது சிங்காரி செயலியை பதிவிறக்கம் செய்த பயனர்களில் அதிகமானோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவை தவிர, யுஏஇ, அமெரிக்கா, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா, வியட்நாம் மற்றும் பிற நாடுகளில் இந்த செயலியின் பயன்பாடு சீராக அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading