Home /News /technology /

சீன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை; சீனாவின் தரப்பில் விளக்கம்

சீன ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தடை; சீனாவின் தரப்பில் விளக்கம்

Smartphone

Smartphone

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12,000 ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியா தடை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    ஒவ்வொரு நாளும் புதிதாக பல்வேறு பிராண்டுகளில், மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன. ஒரு சில ஆயிரங்கள் முதல் ஒரு சில லட்சங்கள் வரை அனைத்து வகையான பட்ஜெட்க்கும் ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை, இறக்குமதி அனைத்துமே கணிசமாக உயர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன.

    இந்த நிலையில் சமீப காலமாக சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்களை வரி ஏய்ப்பு செய்வதாகவும் அறிக்கைகள் வெளியாகின. இதனால், இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனைகளை கவனமாக ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் கடந்த சில நாட்களாக சந்தையில் அறிமுகமாகி வந்த நிலையில், இந்தியாவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் போன்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியானது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    மாதிரிப்படம்


    பிரபலமான பிராண்டுகளில், அதி நவீன அம்சங்களுடன் பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கூட ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு தயாராக இருப்பவர்கள் மத்தியில் விலை மலிவான பட்ஜெட்டிலும் ஸ்மார்ட்போனுக்கு கணிசமான அளவு வரவேற்பும் தேவையும் இருக்கிறது. இந்திய சந்தையில் ₹12,000 க்கு குறைவான ஸ்மார்ட்போன்களுக்கு அதிக டிமாண்ட் இருந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12,000 ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியா தடை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சியோமி, oppo, vivo உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : ரூ.3000 மதிப்பிலான ஆஃபர்கள்... சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ அதிரடி அறிவிப்பு

    சீன மொபைல்களுக்கு இந்தியாவில் தடை என்ற செய்தி வெளிவந்த சிறிது நேரத்திலேயே சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சீனாவுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருந்து வரும் நிலையில், இந்தியா சீன மொபைல்களுக்கு தடை விதித்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிப்படையான பரிவர்த்தனைகளையும் முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிசெய்வதாக இந்தியாவுக்கு அறிவித்தது.

    smartphones
    ஸ்மார்ட்போன்


    சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையில் உள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டு நாடுகளுக்குமே பரஸ்பர நன்மைகள் அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு, இயங்குவதற்கு, வெளிப்படையான, நியாயமான, மற்றும் பாரபட்சமற்ற வணிகச் சூழலை வழங்க வேண்டும் என்றும், சீனா அர்பணிப்புடன் ஒத்துழைக்கும். மேலும், சீன நிறுவனங்களின் சட்ட ரீதியான நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்து சீனா ஆதரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    மிக அதிகளவில் சைனாவின் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வரும் நிலையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து 150 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை இந்தியா தடைசெய்ய இருக்கிறது என்ற ப்ளும்பெர்க் அறிக்கைக்குப் பிறகு தான் இந்த அறிக்கை வெளியானது. இதைப் பற்றி பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் உருவாக்கும் நிறுவனங்களான சியோமி, ரியல்மீ உள்ளிட்ட நிறுவனங்களிடம் கருத்து கேட்கையில் அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.
    Published by:Vijay R
    First published:

    Tags: China, Smartphone

    அடுத்த செய்தி