உலகின் மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய உதவும் மைக்ரோபிளாஸ்டிக்ஸை "சாப்பிடும்" ரோபோ மீனை தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக மாசுபாட்டின் பெரிய காரணியாக இன்று இருந்து வருவது மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்ணிய நெகிழிகள். மிகவும் மெல்லியதாக இருக்கும் இந்த நெகிழிகள் நீர்நிலையங்களில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மீன்கள், ஆமைகள் இதை உண்டு இறந்து விடுகிறது. இதை எளிதாக நீரை விட்டு பிரிக்க முடிவதில்லை. இதை அகற்றுவதற்கான தொழிநுட்பத்தைக் கண்டுபிடிக்க நாடுகள் போட்டி போடுகின்றன.
இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சிறிய ரக ரோபோ மீனை உருவாக்கியுள்ளனர். ஒரு ரோபோ மீன் என்பது உயிருள்ள மீனின் வடிவத்தையும் இயக்கத்தையும் கொண்ட பயோனிக் ரோபோ ஆகும். தண்ணீரில் மீனை போலவே சுண்டி இழுக்கும் திறனை கொண்ட 30 வடிவமைப்பு வித்தியாசங்கள் கொண்ட ஏறக்குறைய 40 வகையான மீன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !
உண்மையான மீன்களைப் போலவே தொடுவதற்கு மென்மையான மற்றும் 1.3 சென்டிமீட்டர் (அதாவது 0.5 அங்குலம்) அளவு கொண்ட மீன்களை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ மீன்களுக்கு உள்ளடங்கிய அம்சம் உள்ளது, அதன் மூலம் அவற்றை வைத்திருக்கும் நீர்நிலையிலிருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸை உட்கொள்கிறது. இதனால் அனைத்து மாசுபட்ட கடல்கள் அல்லது பிற நீர்நிலைகளை சுத்தம் செய்ய முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த குழு ஏற்கனவே ஆழமற்ற நீரிலுள்ள மைக்ரோபிளாஸ்டிக்கை அகற்றுவதில் மீன்களின் திறனை சோதித்து, வெற்றி பெற்றுள்ளது. ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை சேகரிக்கவும், நிகர் நேரத்தில் கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்கவும் இந்த மீன்களை பயன்படுத்த மேம்பாடுகளை செய்து வருகிறோம் என்று , விஞ்ஞானி வாங் யுயன் கூறினார்.
இந்த மீன்களின் மற்றொரு அற்புதமான அம்சம் என்னவென்றால், பெரும்பாலான செயற்கை மென்மையான ரோபோக்களை விட உடல் நீளம் கொண்டதால், அவை வினாடிக்கு 2.76 மடங்கு தூரம் நீந்த முடியும். சிறிய பேட்டரி மூலம் இயங்கும் இந்த மீன்கள் மாசுக்களை உறிஞ்சி, சேதம் அடைந்தாலும் தங்களைத் தாங்களே 89% வரை மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.
மற்ற மீன்கள் அல்லது கப்பல்கள் மீது மோதாமல் இருக்க, கதிர்வீச்சு ஒளி அம்சத்துடன் அதன் துடுப்புகளை உருவாக்கியுள்ளனர். மற்ற மீன்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இது தற்செயலாக மற்ற மீன்களால் உண்ணப்பட்டாலும், பாலியூரிதீன் இருந்து தயாரிக்கப்படுவதால், அது உயிருடன் இணக்கமானதாகும். சிக்கல் இல்லாமல் செறிந்து விடும் என்று வாங் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Fish, Plastic pollution