முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / செய்தி வாசிப்பாளர்களே ஓய்வெடுங்கள்... ரோபோக்கள் வந்துவிட்டன!

செய்தி வாசிப்பாளர்களே ஓய்வெடுங்கள்... ரோபோக்கள் வந்துவிட்டன!

மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் (Image: Xinhua news agency)

மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் (Image: Xinhua news agency)

செய்தி வாசிப்பாளர்களின் குரல், உச்சரிப்பு, முக பாவணைகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்யக்கூடியவர்கள்.

  • Last Updated :

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்திய நிலையில், ஊடகத்துறையிலும் தனது ‘வேலை’யை காட்டியுள்ளது.

சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) ஊடகத்துறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் தேடுதல் தளமான சோகோவ் (Sogou) செயற்கை நுண்ணறிவு மூலம் செய்திகள் வாசிப்பதற்காக மெய்நிகர் மனிதர்களை உருவாக்கியுள்ளது.

செய்தி வாசிப்பாளர்களின் குரல், உச்சரிப்பு, முக பாவணைகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் ஓய்வே இல்லாமல் வேலை செய்யக்கூடியவர்கள்.

செய்திகளை டைப் செய்து கொடுத்தால் மட்டும் போதும், செய்திகள் வாசிக்கும் வீடியோ கிடைத்துவிடும். சீன மொழி மற்றும் ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்கும் வண்ணம் தற்போது இது உருவாக்கப்பட்டுள்ளது. நிஜமான செய்தி வாசிப்பாளருக்கும் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் மிகத்துல்லியமாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

' isDesktop="true" id="67821" youtubeid="GAfiATTQufk" category="technology">

என்னதான் மெச்சத்தக்க வகையிலான தொழில்நுட்பம் என்றாலும், செய்திகளின் தன்மைக்கேற்ப மனிதர்களைப் போல மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்களால் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியுமா? என்பது சந்தேகமே என மேற்கத்திய ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also See..

First published:

Tags: Artificial Intelligence, China