ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!

துபாய் வானில் முதன்முறையாக பறந்த சீனாவின் பறக்கும் கார்..!

துபாயில் சோதனை செய்யப்படும் சீனாவின் பறக்கும் கார்

துபாயில் சோதனை செய்யப்படும் சீனாவின் பறக்கும் கார்

X2 என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் வசதி கொண்ட (eVTOL) விமானமாகும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

சீன எலக்ட்ரானிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங் இன்க்(Xpeng Inc) தயாரித்த "பறக்கும் கார்" ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதன் முதல் பொது விமான பயணத்தை சோதித்தது.

சாலைகளில் நெரிசல்கள் அதிகரிப்பதால் வானத்தில் பறந்து செல்லும் தொழில்நுட்பத்தை நோக்கி உலகம் பயணிக்க தொடங்கிவிட்டது. பறக்கும் டாக்ஸி, பறக்கும் கார் , தனியாள் ஹெலிகாப்டர் என்று நிறைய சோதனைகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சீனாவின் எக்ஸ்பெங் நிறுவனம் பறக்கும் கார் ஒன்றைத் தயாரித்து அதை சோதனை செய்து வருகிறது. பறக்கும் கார் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளில் மின்சார விமானத்தை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது. அதற்கான தயாரிப்புகள் மற்றும் சோதனைகளையும் செய்து வருகிறது

பூமியில் மட்டுமில்லை செவ்வாய் கிரகத்திலும் இந்தப்பிரச்னை நடந்திருக்காம்..! - ஆதாரங்களை அடுக்கும் விஞ்ஞானிகள்

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த விமானம் X2 என்றழைக்கப்படுகிறது. X2 என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் வசதி கொண்ட (eVTOL) விமானமாகும். இது வாகனத்தின் ஒவ்வொரு மூலையிலும் இரண்டு ப்ரொப்பல்லர்கள் உள்ளது. அதன் இயக்கத்தால் இந்த பறக்கும் கார் தரையில் இருந்து மேலே தூக்கப்படுகிறது.

திங்கள்கிழமை இந்த ஆளில்லா பறக்கும் கார் துபாயில் , அதன் உற்பத்தியாளரால் 90 நிமிட சோதனை உள்ளாக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரகம் அடுத்த தலைமுறை பறக்கும் கார்களுக்கான முக்கியமான தளமாக மாறி வருகிறது.

"நாங்கள் சர்வதேச சந்தைக்கு படிப்படியாக நகர்வு செய்கிறோம். புதிய சோதனைக்கு முதலில் நாங்கள் துபாய் நகரத்தைத் தேர்ந்தெடுத்தோம். காரணம் துபாய் உலகின் மிகவும் புதுமையான திறன்களையும் சோதனைகளையும் ஏற்கும் நகரமாக திகழ்ந்து வருகிறது" என்று Xpeng Aeroht இன் பொது மேலாளர் மிங்குவான் குய் கூறினார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: China, Dubai