சீன விண்வெளி வீரர்களான காய் சூஷே மற்றும் சென் டோங் ஆகியோர் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 17) தியாங்காங் என்ற சீன நாட்டின் புதிய நிலையத்திலிருந்து விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டனர்.
சீனாவின் சின்ஹுவா நியூஸ் ஏஜென்சியின் கூற்றுப்படி, சீனாவின் புதிய விண்வெளி ஆய்வகத்தின் விண்வெளி வீரர்கள் அந்த ஆய்வகத்தின் அவசரகால ஹட்ச் கதவை வெளியில் இருந்து திறக்க ஒரு கைப்பிடியையும் , நிலைய ஆய்வக தொகுதி வென்டியனில் பம்ப்களை நிறுவும் போது இந்த விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டனர். விண்வெளி வீரரின் கால்களை ஒரு ரோபோ கையில் பொருத்திக் கொண்டு நடந்தனர்.
நாசா மற்றும் ஐரோப்பிய நிறுவனம் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்கி வருகிறது. இதையடுத்து சீன தனது சொந்த தயாரிப்புகள் கொண்டு டியாங்காங் எனும் ஒரு புதிய விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்கி வருகிறது.
சீன விண்வெளி நிலையத்தின் முக்கிய தொகுதிகள் விண்வெளியை அடைந்ததை அடுத்து நிலையத்தை விண்வெளியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சீனாவின் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வானில் பறக்க நீங்க தயாரா..! உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்
அப்படி அவர்கள் விண்வெளியில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.இது சீன விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்கள் ஆகும்.
டியாங்காங் விண்வெளி நிலையத்தின் பணி நிறைவடைந்த பின்னர் அது, 1980 களில் இருந்து 2001 வரை பூமியைச் சுற்றி வந்த சோவியத் ரஷ்யாவிற்கு சொந்தமான ‘மிர் விண்வெளி நிலையத்தைப்’ போலவே காட்சியளிக்கும் என்கின்றனர். இரு விண்வெளி வீரர்கள் தியாங்காங்கை மேற்பார்வையிடும் பணிக்காகத் தான் ஆறு மாத கால பயணமாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையம் குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்குச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, டியாங்காங்கின் மையத் தொகுதி கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.