முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / தொலைதூர காதலர்கள் முத்தம் கொடுக்க ரிமோட்.. ஷாக்கில் மக்கள்.. பஞ்சாயத்தை கிளப்பிய சீனாவின் கண்டுபிடிப்பு!

தொலைதூர காதலர்கள் முத்தம் கொடுக்க ரிமோட்.. ஷாக்கில் மக்கள்.. பஞ்சாயத்தை கிளப்பிய சீனாவின் கண்டுபிடிப்பு!

முத்த சாதனம்

முத்த சாதனம்

இந்த சாதனம் பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

லாங் டிஸ்டன்ஸ் காதலர்கள் பற்றிய நிறைய வீடியோக்களை இணையத்தில் நாம் பார்த்திருப்போம். தொலைதூரத்தில் இருக்கும் தனது காதலரை மிஸ் செய்யாமல் இருக்க பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால் வசதி நேரில் பார்க்காவிட்டாலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பை தருகிறது.

அதேபோல, இருவேறு இடங்களில் உள்ள காதலர்கள் சேர்ந்து ஒரு படத்தை பார்க்க விரும்பினால் அதற்காக டெலிபார்ட்டி, அமேசான் பிரைம் வாட்ச் பார்ட்டி, சீனர்(scener ), குரோம் வாட்ச் பார்ட்டி, ரேவ்(rave ), டூசெவென்(TwoSeven), Watch2Gether, காஸ்ட், சிங்க்பிளே , ப்ளெக்ஸ் உள்ளிட்ட செயலிகள் உதவுகின்றன. ஆனால் காதலர்களிடையே மிஸ் செய்யும் மற்றொரு முக்கிய விஷயம் முத்தம். தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் செயலான முத்தத்தைக் கடத்த இதுவரை எந்த சாதனமும் இல்லை. ஆனால் இப்போது உள்ளது. சீனாவின் சான்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் முத்தத்திற்கான சாதனத்தை உருவாகியுள்ளது. இது சீன சமூக ஊடகம் தாண்டி உலக நெட்டிசன்களிடையே  ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

தொலைதூர காதலர்கள் தங்களது காதல் தருணங்கள் மெய்நிகர்  தருணங்களாகப் பகிர்ந்து கொள்ள இந்த 'முத்தம் சாதனம்'  அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. சிலிக்கானை வைத்து மனிதனின் உதடுகளை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'சிலிக்கான் லிப்ஸ்' உடன் கான்ட்ராப்ஷனில் பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாதனம் பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று அறிக்கை கூறுகிறது. அதனால் இந்த சாதனம் மனிதர்கள் நேரில் பரிமாறும்  உண்மையான முத்தத்தைப் பிரதிபலிக்கும் என்று சீனாவின்  குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது . மேலும் இந்த சாதனத்தின் விலை 288 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ₹ 3,433 ஆகும் .

இந்த ரிமோட் 'முத்த சாதனத்தை" பயன்படுத்த பயனர்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள  மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கி, சாதனத்தை மொபைலின் சார்ஜிங் போர்ட்டில் இணைக்க வேண்டும். ஆப் மூலம் தனது காதலருடன் இணையத்தில் இணைந்தபிறகு  , அவர்கள் ஒரு வீடியோ அழைப்பைத் தொடங்கலாம் . அதன் பின்னர் அதே ஆப் மூலம் அவர்களின் முத்தங்களின் பிரதிகளை ஒருவருக்கொருவர் அனுப்பலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சாதனத்தின் கண்டுபிடிப்பாளர் ஜியாங் ஜாங்லி தனது காதலியுடன் நீண்ட தூர உறவில் இருப்பதாகவும், தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பில் இருக்க முடியும் என்பதால் இந்த புதிய வகை சாதனத்தை உருவாக்குவற்கான உத்வேகம் வந்தது என்று கூறுகிறார்.

இதையும் படிங்க: நீங்கள் புகைபிடிப்பவரா?... உங்கள் ஐபோனுக்கு வாரண்ட்டி கிடையாது தெரியுமா..?

இந்த சாதனம் குறித்த செய்தி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது. மேலும் இந்த சாதனம் குறித்த கலவையான கருத்துக்களும், விவாதங்களும் நடந்து வருகிறது. காதலர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை குழந்தைகள் வாங்கி பயன்படுத்தும் வாய்ப்புள்ளதால் ஏற்படும் சமூக நிலையை நினைத்து சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதேபோல முத்தம் என்ற அன்பின் பரிமாணத்தை மெஷினுக்குள் அடக்கிவிடக் கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக  2016 ஆம் ஆண்டில், மலேசியாவில் உள்ள இமேஜினியரிங் இன்ஸ்டிடியூட், தொடு உணர் சிலிக்கான் பேட் வடிவத்தில், 'கிஸ்ஸிங்கர்' என்ற பெயரில் இதேபோன்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியது.

First published:

Tags: Lip Kiss, Technology