6ஜி தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கியது சீனா..!

5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டியதாக சீனாவையும் அமெரிக்காவையும் மிரட்டியது தென்கொரியா.

6ஜி தொழில்நுட்பப் பணிகளைத் தொடங்கியது சீனா..!
6ஜி
  • News18
  • Last Updated: November 8, 2019, 5:35 PM IST
  • Share this:
6 ஜி தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரத் தயாராகி வருகிறது சீனா.

6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்க சீனாவின் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் இன்னபிற முக்கியத் துறைகள் இணைந்து கலந்து ஆலோசித்துள்ளனர். இதுதொடர்பான செய்திகளை சீன ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அல்ட்ரா வேக இணைய சேவையை முதலில் செயல்படுத்துக் காட்டுவதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு மறைமுகப் போர் நடந்து வருகிறது என்றே சொல்லலாம். 4ஜி தொழில்நுட்பத்தைவிட 20 மடங்கு வேகமான 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த உலக நாடுகள் பணியாற்றி வருகின்றன.


self-driving கார்கள், augmented ரியாலிட்டி ஆகிய தொழில்நுட்பங்களுக்கு செயல்வடிவு கொடுக்க 5ஜி தொழில்நுட்பம் பெரிதும் உதவும். கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலாக 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்திக் காட்டியதாக சீனாவையும் அமெரிக்காவையும் மிரட்டியது தென்கொரியா.

இம்முறை 6ஜி தொழில்நுட்பத்தில் சீனா முன்னனியில் இருக்க வேண்டும் என அந்நாடு அல்ட்ரா வேகத்தில் செயல்பட்டுவருகிறது.

மேலும் பார்க்க: நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..!
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading