Home /News /technology /

இனி விண்வெளிக்கே டூர் போகலாம்... விண்வெளி பயணத்தை தொடங்கும் சீனா!

இனி விண்வெளிக்கே டூர் போகலாம்... விண்வெளி பயணத்தை தொடங்கும் சீனா!

வணிக விண்வெளி பயணம்

வணிக விண்வெளி பயணம்

சீன விண்வெளி சுற்றுலா துறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இந்த பணிக்கான செலவு 2-3 மில்லியன் யுவான் - சுமார் ₹ 2-3.4 கோடி ஆகலாம் என்று யாங் கூறுனார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சீனா தனியார் பயணிகளுக்காக தனது முதல் வணிக விண்வெளி பயணத்தை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் செயல்முறைக்கு வரும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

‘லாங் மார்ச் 11 ராக்கெட்’ திட்டத்தின் பொது இயக்குநரும், அரசாங்க ஆதரவுடன் கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை அளித்த அறிக்கையின்படி சீன விண்வெளி சுற்றுலா துறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இந்த பயணத்திற்காக ஒரு ஆளுக்கு  2-3 மில்லியன் யுவான் - சுமார் ₹ 2-3.4 கோடி கட்டணம் ஆகலாம் என்று யாங் கூறுனார்.

திட்டம் குறித்து விரிவாகக் கூறிய அவர், இன்று பூமி சுற்றுவட்டப் பயணம் என்பது மிகவும் வளர்ச்சியடைந்ததாகவும், பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக மாறி வருவதாகவும் கூறினார். சீன விண்வெளி பயணத்தில் ஒரு நேரத்தில், ஏழு சுற்றுலாப் பயணிகள் வரை கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தை அடைந்து, பின்னர் பூமிக்கு திரும்பும் 10 நிமிட பயணம் இது என்று குறிப்பிட்டார்.

விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட சீன வீரர்கள்..!

வணிக விண்வெளி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, நிறுவனம் ஏற்கனவே சீன நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான பயண நிறுவனமான ‘சீனா டூரிசம்’ குழுமத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் முன், அடுத்த ஆண்டு முதல் பல ஆளில்லா விமான சோதனைகளை மேற்கொள்ளும்.

வணிக விண்வெளி நடவடிக்கைகள்
சீனா வணிக விண்வெளி நடவடிக்கைகளில் தாமதமாக தான் நுழைந்துள்ளது. கடந்த ஆண்டு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எலோன் மஸ்க் நான்கு தனியார் பயணிகளை சுற்றுப்பாதைக்கு அனுப்பி வெற்றி பெற்றார். அவர்களில் யாரும் தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லை.

விண்வெளி நிலையத்தின் தற்போதைய சுற்றுப்பாதையை விட அதிக உயரத்தில் பயணிகள் பறந்ததாக SpaceX தெரிவித்துள்ளது. பயண குழுவினர் சுமார் 575 கிமீ உயரத்தில் மூன்று நாட்கள் பூமியைச் சுற்றி வந்துள்ளனர்.

ISRO : விண்வெளி சுற்றுலா நோக்கி பறக்கும் இஸ்ரோ

மற்றொரு தொழிலதிபரான ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தனது ஆறாவது மனித விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்தது.

இஸ்ரோவும் தனது தொழில்முறை விண்வெளி சுற்றுலாவை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

காலம் தாழ்ந்தாலும் சீனா தனது இருப்பை விரைவாக நிலைநிறுத்தி வருவதாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு தரவுகளின்படி, சீனாவில் 370 வணிக விண்வெளி தொடர்பான நிறுவனங்கள் உள்ளது. 2017 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 புதிய விண்வெளி தொடர்பான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: China, Space, Tourism

அடுத்த செய்தி