முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 2ஆம் தொகுதியை விண்ணில் ஏவிய சீனா!

டியாங்காங் விண்வெளி நிலையத்தின் 2ஆம் தொகுதியை விண்ணில் ஏவிய சீனா!

டியாங்காங் விண்வெளி நிலையம்

டியாங்காங் விண்வெளி நிலையம்

Wentian மற்றும் Mengtian தொகுதிகள் பக்கத்தில் இருக்க, ​​Tianhe தொகுதி மையத்தில் இருந்து , T வடிவ விண்வெளி நிலையத்தை நிறைவு செய்யும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக ஒரு விண்வெளி நிலையத்தை சீன அரசு உருவாக்கி வருகிறது. விண்வெளியில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் தனது விண்வெளித் திட்டத்தை மேம்படுத்தி, சீனா ஞாயிற்றுக்கிழமை   தனது விண்வெளி நிலையத்தின் முக்கிய பகுதியான வென்டியன் ஆய்வக தொகுதியை சீன நேரப்படி மதியம் 2:22 (இந்திய நேரப்படி காலை 11:53)  மணி அளவில் விண்ணில் செலுத்தியது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏவப்பட்ட டியாங்காங் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க தேவையான மூன்று தொகுதிகளில் வெண்டியன் தொகுதி இரண்டாவது ஆகும்.

ISRO : விண்வெளி சுற்றுலா நோக்கி பறக்கும் இஸ்ரோ

தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-5பி ஒய்3 ராக்கெட்டைப் பயன்படுத்தி 23 டன் எடையுள்ள தொகுதியை விண்ணில் ஏவியுள்ளது. இது விண்வெளி ஆய்வகத்தின் முக்கிய கோர் தொகுதியுடன் இணைக்கப்படும்.

வென்டியன் தொகுதி என்பது மூன்று உறங்கும் பகுதிகளையம், ஒரு வேலை செய்யும் அறையையும் கொண்டுள்ளது. இது ஒரு நேரத்தில் ஆறு விண்வெளி வீரர்களுக்கு இடமளிக்கும். மேலும், வென்டியனில் ஒரு நெகிழ்வான சோலார் பேனல் உள்ளது, இது ஒரு நாளைக்கு சராசரியாக 430 கிலோவாட் மின்சாரத்தை உருவாக்கும். ஒரு மாதத்திற்கும் மேலாக சராசரி பெய்ஜிங் குடும்பத்தின் மின் தேவையை வென்டியனின் மின் உற்பத்தி எளிதாக ஆதரித்திரிக்கும் அளவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

லோ எர்த் ஆர்பிட் எனப்படும் பூமியிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் அமைந்துள்ள விண்வெளி நிலையத்தில் வசிக்கும் மூன்று சீன விண்வெளி வீரர்களான சென் டோங், லியு யாங் மற்றும் காய் சூஷே ஆகியோர் தொகுதியின் வருகையை கவனிப்பார்கள். பின்னர், ஏற்கனவே உள்ள தொகுதியோடியு இதை இணைத்து நிலையத்தின் புதிய தொகுதிக்குள் மிதக்கும் முதல் குழு உறுப்பினர்களாக மாறுவார்கள் என்று கூறப்படுகிறது.

மெங்டியன் தொகுதி என்று பெயரிடப்பட்ட விண்வெளி நிலையத்திற்கான சீனாவின் மூன்றாவது மற்றும் இறுதி தொகுதி இந்த ஆண்டின் அக்டோபரில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Wentian மற்றும் Mengtian தொகுதிகள் பக்கத்தில் இருக்க, ​​Tianhe தொகுதி மையத்தில் இருந்து , T வடிவ டியாங்காங் விண்வெளி நிலையத்தை நிறைவு செய்யும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 16 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீனா தனது விண்வெளி நிலையத்தை நிறைவு செய்யும் நிலையில், பூமியின் சுற்றுப்பாதையில் ISS மற்றும் Tiangong இரண்டும் செயலில் உள்ள விண்வெளி நிலையங்களாக இருக்கும்.

2019 இல் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே சிவன் அறிவித்தபடி, இந்தியா தனது சொந்த நிலையத்தை 2030 க்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: China, Satellite launch, Space