ஆப்பிள் நிறுவனத்தை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த பொறியியல் மாணவர்கள்

சீனாவிலிருந்து ஐ ஃபோன் தயாரிக்கப்பட்டு அதை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதுதான் இவர்களின் வேலை.

news18
Updated: April 5, 2019, 7:35 PM IST
ஆப்பிள் நிறுவனத்தை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் சம்பாதித்த பொறியியல் மாணவர்கள்
ஆப்பிள் நிறுவனம்
news18
Updated: April 5, 2019, 7:35 PM IST
அமெரிக்காவில் படிக்கும் சீனாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலியாக ஆப்பிள் ஃபோன் தயாரித்து அதை ரீப்ளேஸ்மெண்ட்டிற்காக ஆப்பிள் நிறுவத்திற்கே அனுப்பி ஒரு மில்லியன் வரை சம்பாதித்துள்ளனர்.

பொறியியல் படித்துவரும் யாங்கியான் ஸௌ Yangyang Zhou மற்றும் குவான் ஜியாங் Quan Jiang என்னும் இரண்டு சீன மாணவர்கள் 2017 ஆண்டிலிருந்தே கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்படித்தான் இந்தை ஐ ஃபோன் போலி தயாரிப்பையும் தொடங்கியுள்ளனர். சீனாவிலிருந்து ஐ ஃபோன் தயாரிக்கப்பட்டு அதை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதுதான் இவர்களின் வேலை.




இவர்கள் தயாரித்த போலி ஐ ஃபோன்களை , சரியாக வேலை செய்ய வில்லை, ஸ்விட்ச் ஆன் ஆகவில்லை என புகார் அளித்து ரீப்ளேஸ்மெண்டிற்காக அனுப்பி வைப்பார்களாம்.
ஐ ஃபோன் நிறுவனமும் அதை ஆராய்ந்து அதற்கு மாற்றாக உண்மையான ஐஃபோன்களை அனுப்பி வைப்பார்களாம். அப்படி வரும் ஃபோன்களை சீனாவிற்கு அனுப்பி விடுவார்களாம்.

Loading...

இப்படியாக மொத்தம் 8,95,800 டாலர் மதிப்புள்ள ஐ ஃபோன்களை அனுப்பியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்திய ரூபாயின்படி 6, 20,07,276 ரூபாய் ஏமாற்றியுள்ளது.

படிக்க... நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்து கணவன் சித்தரவதை!

வாட்ஸ்அப் அட்மின்களே...இனி ஒருவருடைய அனுமதி இல்லாமல் உங்களால் இதைச் செய்ய முடியாது!

இப்படி இந்த மாணவர்கள் மொத்தம் 3,069 வாரண்டி கிளெய்ம்களை அனுப்பியுள்ளது. அதில் 1,493 உண்மையான ஐஃபோன்களைப் பெற்றுள்ளனர். இப்படியாக சுமார் ஒரு மில்லியன் ரூபாய்க்கான மதிப்பீட்டில் செல்ஃபோன்களை அனுப்பியுள்ளது.

இந்திய ரூபாயின் படி சுமார் ஏழு கோடி மதிப்பிலான ஐ ஃபோன்களை அந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இதில் ஸௌ சட்ட விரோதமாக சரக்குகளை ஏற்றுமதி செய்த குற்றத்திற்கும் ஜியாங் சட்டவிரோதமாக நகல் பொருட்கள் மற்றும் கடத்தல் மோசடி செய்த குற்றத்திற்கும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்களை விடுவித்தாலும் ஜி பி எஸ் மூலம் காவல்துறை கண்கானித்து வருகிறது.

Also See...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...