கொரோனா கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

9 மற்றும் 11ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பது, பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  • Share this:
    மத்திய அரசு பிப்ரவரி 28ம் தேதி வரை கொரோனா கட்டப்பாடுகளை நீட்டித்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

    கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டங்களில் கொரோனா நிலவரம் குறித்தும், அங்கு மேற்கொள்ளபட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கானொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், முகக்கவசம் அணிதல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 9 மற்றும் 11ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பது, பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், மத்திய அரசு வழங்கியுள்ள தளர்வுகளில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூறியுள்ள நிலையில், தமிழகத்திலும் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் படிக்க... சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள்!

    மேலும் நீச்சல் குளத்திற்கு அனுமதி வழங்குவது உள்ளி பல்வேறு தளர்வு குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    Published by:Suresh V
    First published: