வடிவேலு சொல்லும் மசாலா ஊத்தாப்பத்தை கேட்கும்போதே அனைவருக்கும் வாயில் எச்சி ஊரும். தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! அதுவும் மொறுமொறுன்னு அப்படியே நெய் ஊற்றி, பொடி தூவி சுட சுட சாப்பிட்டால் சொர்க்கமே வயிற்றுக்குள் தெரியும்.
ஆனால் அதை நின்று சுடும் நேரம் அடுப்புக்குள்ளே நின்றது போல் இருக்கும். பெரிய குடும்பம் என்று வந்துவிட்டால் முடிந்தது. நின்று சுட்டுக்கொடுத்து மாளாது.
இப்போது தோசை விரும்பிகளுக்காகவே சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது தனித்துவமான தயாரிப்பை வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த 'ஈவோசெப்'(evochef) எனும் நிறுவனம் மெல்லிய மொறு மொறு தோசை முதல் பஞ்சுபோன்ற ஊத்தப்பம் வரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படிபட்ட தோசையை சுட்டுத்தரும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?
எப்படி ஒரு பிரிண்ட்டர் பேப்பரை அச்சிட்டு வெளியிடுகிறதோ அதே போல இந்தக்கருவியும் தோசையை சுட்டு வெளியிடுகிறது. உலகின் முதல் ஸ்மார்ட் தோசை மேக்கர் என்று சொல்லப்படும் இந்த கருவிக்கு 'ஈசி பிலிப்'(EC Flip) என்று பெயரிட்டுள்ளனர்.
எப்படி தோசை சுடும்?
இந்த கருவியில் 700 மில்லி லிட்டர் மாவு ஊற்றும் ஒரு டேங்க் அமைப்பு இருக்கும். அதில் மாவை ஊற்றிவிட்டு தோசை எந்த அளவில் வேண்டும் , எத்தனை வேண்டும் என்று உள்ளிட்ட வேண்டும். தோசையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்றும் உள்ளிடலாம்.
நாவூறும் சுவையில் நேபாள உணவுகள்... இமயமலை சாரலோடு வாங்க சாப்பிடலாம்!
முறுகலாக வேண்டும் என்றால் சமைக்கும் நேரத்தைக் கொஞ்சம் கூடுதலாக வைக்கவேண்டும். அதன்பின்னர் வரிசையா தோசை சுட்டு தட்டில் விழும். 700மில்லி மாவில் 10 மெல்லிய தோசை அல்லது 6 ஊத்தப்பம் வரை சுட முடியும்.
அரிசி மாவு மட்டுமின்றி, கம்பு, சோளம், கோதுமை, ரவாதோசை, 2 நிறம் , 3 நிற தோசை என்று வகை வகையாக சுட முடியுமாம்.
விலை: நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த தோசை சுடும் கருவியின் விலை ரூ.15,999. கொஞ்சம் அதிகம் தான் என்று நினைக்கிறார்கள் மக்கள். ஆரஞ்சு, நீளம், பழுப்பு , மாற்று வெள்ளை நிறங்களில் பல்வேறு கூடுதல் அம்சங்களோடு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dosa, Gadgets, Kitchen Hacks