சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆப்பிள் ₹7500 கோடி முதலீடு - பழைய தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை

”ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தை வேறு எந்த நிறுவனமும் பொருட்டாக எடுக்காததால், அங்கு பணி புரிந்த பலர் கூலித் தொழிலாளியாக மாறினர்”

சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆப்பிள் ₹7500 கோடி முதலீடு - பழைய தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை
ஃபாக்ஸ்கான்
  • News18
  • Last Updated: July 13, 2020, 7:19 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆப்பிள் நிறுவனம் 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள நிலையில், 201 4 -ம் ஆண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து நோக்கியா செல்போன் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வந்த நிலையில், 2014-ல் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தனது தொழிற்சாலையில் வேலை செய்துவந்த ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பியது.

இந்த அதிரடி முடிவால் கதிகலங்கி போன தொழிலாளர்கள் தங்களுக்கும் வேலை தர வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதுவரை பலன் கிடைக்கவில்லை. மேலும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தை வேறு எந்த நிறுவனமும் பொருட்டாக எடுக்காததால், அங்கு பணி புரிந்த பலர் கூலித் தொழிலாளியாக மாறினர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இந்த கோமதி. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த பெண் தற்போது உணவகத்தில் தினக்கூலிக்கு வேலை செய்கிறார்.

படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?
படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ
கிட்டத்தட்ட 10 வருட முன் அனுபவம் பெற்ற இந்த பணியாளர்களை , ஃபாக்ஸ்கான் நிறுவனம் நிர்கதியாக தவிக்கவிட்டிருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் மீண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கினால் அதில் வேலை இழந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது அதை காற்றில் பறக்கவிட்ட நிர்வாகத்தை அரசும் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

 

2014-ஆம் ஆண்டு டிசம்பரில் வேலை இழந்த இந்த கோமதி போன்ற தொழிலாளர்களை கொண்டு புதிதாக உருவாக்கப்பட உள்ள சுமார் ஆறாயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading