முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு

நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு

ரோபோ

ரோபோ

ரஃபி உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்டது. ஒரு நபர் முகம், குரலை வைத்தே அந்த நபர் சோகமாக இருக்கிறார் என்பதைக் கூறும் திறன் கொண்டது

  • Last Updated :
  • Chennai, India

அறிவியல் வளர்ச்சி என்பது ஒரு அபரிமிதமான வேகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. மனிதர்களை விட இயந்திரங்களை பழக்கி அதோடு வாழும் வழக்கம் தான் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களை போலவே சந்திக்கும் திறனை இயந்திரங்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

மனிதனை போலவே சிந்திப்பது மட்டும் இல்லாமல் மனிதனைப்போலவே உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பதிலளிக்கும் இயந்திரங்களும் உருவாக்கி வருகின்றனர். அதன் ஒரு படியாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன், உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளார். தனது கண்டுபிடிப்புக்கு "ரஃபி" என்று பெயரிட்டுள்ள 13 வயது இளைஞன், இது உணர்வுகளைக் கண்டறியும் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்று கூறியுள்ளார்.

இளம் கண்டுபிடிப்பாளர், பிரதீக், ரோபோ தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். கோபப்பட்டு திட்டினால் அது அமைதியாகிவிடும் என்று கூறியுள்ளார். பின்னர், மீண்டும் அந்த ரோபோவை பதிலளிக்க வைக்க, ஒருவர் ரோபோவிடம் கோபப்பட்டதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் மீண்டும் கேள்விகளை அது ஏற்கும். இல்லையேல் அப்படியே அமைதியாக இருக்கும் என்றார்,

மேலும், ரஃபி உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்டது. ஒரு நபர் முகம், குரலை வைத்தே அந்த நபர் சோகமாக இருக்கிறார் என்பதைக் கூறும் திறன் கொண்டது என்கிறார் பிரதீக்.

ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

முகத்தை அடையாளம் காணும் திறன், பேச்சை உள்வாங்கி அதற்கு பதில் அளிக்கும் திறன், பேசும் தொனியில் பேசும் நபரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன், அதற்கு ஏற்றாற்போல் பதில் அளிக்கும் திறன் ஆகியவை இந்த ரோபோவில் அடிப்படை திறனாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை போல் செயல்படும் இந்த ரோபோ வரும்காலத்திய தொழில்நுட்ப கனவுகளை சீக்கிரம் கைகளுக்கு எடுத்து வரும் திறன் பெற்றது.

இந்த ரோபோ பற்றிய படங்களும் செய்தியும் வலைத்தளத்தில் பெரிதும் வைரலாக பரவி வருகிறது, இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா அடைய இருக்கும் அறிவியல் வெற்றியின் முதற்புள்ளியாக இது இருக்கிறது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Artificial Intelligence, New invention, Students invented