• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 40% வரை தள்ளுபடி ஸ்மார்ட் ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்த அமேசான்!

40% வரை தள்ளுபடி ஸ்மார்ட் ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்த அமேசான்!

ரெட்மி

ரெட்மி

அனைவரையும் கவரும் வகையிலான டிசைன் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டுள்ள Redmi 10 Prime ஸ்மார்ட் ஃபோன் தீபாவளி பண்டிகையையொட்டி மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.

  • Share this:
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் தற்போது எங்கு பார்த்தாலும் தள்ளுபடிகள் மற்றும் ஏராளமான சலுகைகளை காண முடிகிறது. பல இடங்களில் வானிலை மாறி மழை வெளுத்து வாங்குவது போல பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி தள்ளுபடி மழை பொழிந்து வருகிறது. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள், ஆடை மற்றும் அணிகலன்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என ஏராளமான பொருட்களின் மீது அதிரடி சலுகைகளில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மக்கள் அதிக விரும்பும் பொருளாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் மீதும் எண்ணற்ற சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகை காலத்தில் முன்னணி ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான் பல நிறுவனங்களின் மொபைல் ஃபோன்களுக்கு தாராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இது குறித்த பட்டியலை கீழே பாருங்கள்..

ரெட்மி 10 பிரைம் (Redmi 10 Prime):

அனைவரையும் கவரும் வகையிலான டிசைன் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டுள்ள Redmi 10 Prime ஸ்மார்ட் ஃபோன் தீபாவளி பண்டிகையையொட்டி மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது. 4GB ரேம், 64GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் வரும் இது Helio G88 Octa-core ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இதன் ஸ்கிரீன் டிஸ்பிளே சைஸ் 6.5 இன்ச் ஆகும். 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 6000mAh பேட்டரி திறனை இந்த ஃபோன் கொண்டுள்ளது. இதன் M.R.P விலை ரூ.14,999-ஆக இருக்கும் நிலையில் தற்போது ரூ.11,999 என்ற சலுகை விலையில் விற்கப்படுகிறது. மேலும் ஒரு சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இதை வாங்கும் போது மேற்கொண்டு 10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெட்மி 9A (Redmi 9A):

மிகவும் குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பினால் இது உங்களுக்கானதாக இருக்கலாம். இந்த டிவைஸ் Helio G25 octa core ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. பட்ஜெட் ஃபோனாக இருப்பினும் இதன் 6.5 இன்ச் ஸ்கிரீன் சைஸ் சிரமமின்றி பார்க்கும் வகையில் வசதியாக உதவுகிறது. 2GB ரேம் + 32GB இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜுடன் வருகிறது. 5000mAH லித்தியம்-பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளது. பின்பக்கம் 13MP மற்றும் முன்பக்கம் 5MP கேமராவை கொண்டுள்ள இதன் M.R.P விலை ரூ.8,499 என்றாலும் ரூ.6,999 என்ற தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் கூடுதலாக 10% தள்ளுபடி பெறலாம்.

Also read... இளைஞர்களே தட்டி தூக்கலாம்... இரு வெர்சன்களில் வெளியான பஜாஜ் பல்சர் பைக்குகள்!

நியூ ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ ( New Apple iPhone 12 Pro):

பட்ஜெட் ஃபோன்களில் மட்டுமல்ல விலை உயர்ந்த பிரீமியம் ஸ்மார்ட் ஃபோனான நியூ ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ-விற்கும் சலுகைகளை வழங்குகிறது அமேசான். 128GB மெமரி ஸ்டோரேஜ், செராமிக் ஷீல்டு, 6.1 இன்ச் ஸ்கிரீன், வேகமான A14 பயோனிக் சிப், 12எம்பி அல்ட்ரா வைட், வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட இதன் M.R.P விலை ரூ.1,19,900, ஆனால் சலுகை விலை ரூ.95,900 ஆகும்.

ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி (OnePlus 9R 5G):

8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் கெபாசிட்டி கொண்ட இந்த போன் 48 MP + 16 MP + 5 MP + 2 MP திறன் கொண்ட குவாட் ரியர் கேமரா செட்டப்பை பெற்றுள்ளது. முன்பக்கம் 16MP கேமரா உள்ளது. 4500mAh பேட்டரி மற்றும் 65வாட் Warp சார்ஜிங் திறன் கொண்ட இதன் M.R.P விலை ரூ.39,999. ஆனால் சலுகை விலை ரூ.36,999 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: