ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்கள்...!

Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்கள்...!

மாதிரி படம்

மாதிரி படம்

ஸ்மார்ட்போன் யூசர்கள் அலுவலக Wi-Fi இலிருந்து விலகி இருக்கும்போது அவர்கள் இண்டெர்நெட் சர்ச் மற்றும் ஆப்ஸ்களை அணுக ஏதுவாக  இந்தியாவில் தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் அட்டகாசமான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகிறார்கள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில், பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் ஒரு நிலையான டேட்டா பிளானை சார்ந்தே இருக்கிறார்கள், அது ஒரு மாதாந்திர பிளானாக இருக்கலாம் அல்லது வருடாந்திர சந்தாவாக கூட இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில், சில நாட்களில் குறிப்பிட்ட டேட்டா லிமிட் சற்றே விரைவாக கூட காலியாகலாம். நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த சிக்கலை எதிர்கொண்டிருப்போம். 

ஸ்மார்ட்போன் யூசர்கள் அலுவலக Wi-Fi இலிருந்து விலகி இருக்கும்போது அவர்கள் இண்டெர்நெட் சர்ச் மற்றும் ஆப்ஸ்களை அணுக ஏதுவாக  இந்தியாவில் தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் அட்டகாசமான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகிறார்கள். ஜியோ, ஏர்டெல் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனம் Vi (வோடபோன் ஐடியா) உள்ளிட்ட பல முக்கிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களும் இந்த ஆபர்களை வழங்குகின்றன. டால்க் டைம், SMS மற்றும் பிற கூடுதல் நன்மைகளும் தொகுக்கப்பட்ட முழுமையான ப்ரீபெய்ட் பேக்குகள் மற்றும் காம்போ பேக்குகளில் கூட டேட்டா வழங்கப்படுகிறது. முழுமையான டேட்டா ப்ரீபெய்ட் பேக்குகள் மொபைல் டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்குகின்றன, டேட்டாவை தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை.

இந்தியாவில் மூன்று பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi - வழங்கும் மலிவான டேட்டா பேக்குகளை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம், அவற்றை கீழே பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் காணலாம்.

ஜியோவின் (Jio) மலிவான டேட்டா பிளான்கள் - ரூ. 11, ரூ. 21 : 

Jio நிறுவனம் வழங்கும் ரூ.11 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் யூசரிடம் ஏற்கனவே இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.21 பிளான் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் யூசரிடம் ஏற்கனவே இருக்கும் பிளானுடன் ஒத்துப்போகும். குறிப்பாக ஜியோவின் இந்த இரண்டு பிளான்கள் டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய பிளான்கள் ஆகும். அதன்படி SMS,காலிங் போன்ற நன்மைகள் இவற்றில் இருக்காது.

BSNL நிறுவனம்:

BSNL நிறுவனம் வழங்கும் ரூ.19 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையுடன் ஒரு நாள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அடுத்து இதன் ரூ.56 பிளான் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையுடன் 10 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. ஆனால் மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் BSNL நிறுவனத்தின் இந்த இரண்டு பிளான்களும் இடத்திற்கு இடம் நன்மைகளில் வேறுபடுகின்றன.

Also read... புதிய பாதுகாப்பான அம்சங்களுடன் வெளியாகிறது ஆப்பிளின் iMessage செயலி!

வோடபோன் ஐடியாவின் (Vi) மலிவான டேட்டா பிளான்கள்: 

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.16 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1 நாள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் இந்நிறுவனம் வழங்கும் ரூ.48 பிளான் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் வோடபோன் ஐடியா வழங்கும் இந்த இரண்டு பிளான்களும் SMS, கால் அழைப்பு நன்மைகளை வழங்காது. அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கக்கூடிய பிளான்கள் ஆகும்.

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மலிவான டேட்டா பேக் - ரூ.48 : 

இந்த பட்டியலிலேயே மிக விலையுயர்ந்த திட்டம் என்றால் அது, ஏர்டெல் நிறுவனத்தின் டேட்டா பிளான் ரூ.48 ஆகும். இது 3 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. டேட்டாவை காலி செய்த பின், யூசர்களுக்கு ஒரு Mbக்கு 50 பைசா வசூலிப்பதாக ஏர்டெல் கூறுகிறது. ஏர்டெல் வழங்கும் இரண்டாவது மலிவான திட்டத்தின் விலை ரூ. 78 இது மொத்தம் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Airtel, BSNL, Jio, Vodafone