ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

''வேற லெவல்தான்.. ஆனால் ஆபத்தும்கூட..'' ChatGPT குறித்து உண்மையைச் சொன்ன முக்கிய நபர்!

''வேற லெவல்தான்.. ஆனால் ஆபத்தும்கூட..'' ChatGPT குறித்து உண்மையைச் சொன்ன முக்கிய நபர்!

ChatGPT ஆல் 45 நாட்களாக விழித்திருக்கிறேன்

ChatGPT ஆல் 45 நாட்களாக விழித்திருக்கிறேன்

Chat GPT | 2022 நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ChatGPT செயலியால் புதிய விஷயங்களை உருவாக்க முடியும் - இது அசாதாரணமானது. இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது ஆபத்தானது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஜெஃப் மகியோன்கால்டா ஆன்லைன் கல்வி தளமான Coursera -ன் CEO, ஜெஃப் மகியோன்கால்டா, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின்  தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகின் சவால்கள் , அதை சமாளித்து வரும் வழிகள்,  ChatGPT எவ்வாறு "அசாதாரணமானது" ஆனால் "ஆபத்தானது" என்பதைப் பற்றி பேசினார்.

தொற்றுநோய்க்கு முந்தைய உலகம் இடத்தை அடிப்படையாகக் கொண்டது. நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு  சென்று தான் கல்வி பயில வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. வேலைக்கு அலுவலகம் தான் போக வேண்டும், ஆனால் நோய் தொற்று காரணமாக எல்லாமே ஆன்லைனுக்கு மாறிவிட்டது.

நோய் தொற்று முடிந்த பின்னும் ஹைபிரிட் முறை தான் நடப்பில் உள்ளது. ஆன்லைன் மற்றும் நேரடி வளாக முறை கலந்து உள்ளது. இதை மேம்படுத்துவதற்காக Coursera இன் இந்தியா திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில் தேர்வுகள் மற்றும் தொழில்துறை சான்றிதழ் படிப்புகளை மற்ற கல்லூரி கற்றல் திட்டங்களில் ஒருங்கிணைக்க  இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்.

மற்ற படிப்புகளோடு அல்லது பணியோடு இதையும் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், இவற்றை பாரம்பரிய பட்டப்படிப்புகளுடன் "தொழில் தேர்வுகள்" என்று அழைக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார். ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், யாருடனும் கற்றுக்கொள்ளலாம் என்றார்.

இந்திய திட்டங்கள் குறித்து பேசிய அவர் 2022 நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ChatGPT ஐப் பற்றி பேசினார். செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும் இந்த செயலியால் புதிய விஷயங்களை உருவாக்க முடியும் - இது அசாதாரணமானது. இது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது ஆபத்தானது மற்றும் இந்த செயலி சில விஷயங்களை சீர்குலைக்கும். இந்த செயலியால் 45 நாட்களாக நான் விழித்திருக்கிறேன் என்று ஜெஃப் மகியோன்கா ல்டா தெரிவித்தார்.

இந்த செயற்கை நுண்ணறிவு செயலியால் இரவுகள் முழுவதும் கழிந்து விடுகிறது. அவ்வளவு  விஷயங்கள் இதில் உள்ளது. மேலும் இந்த செயற்கை நுண்ணறிவுடன் கல்வியை மேம்படுத்த Coursera உடன் ChatGPT ஐ ஒருங்கிணைக்க விரும்புவதாக ஜெஃப் கூறினார்.

அதோடு மாஜியன்கால்டா, Courseraவில் சுமார் 15 படிப்புகளை முடித்திருப்பதாகவும், தற்போது ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் Google Data Analytics கோர்ஸ் - ஒரு தொழில்முறை சான்றிதழ் திட்டம் - மற்றும் பிரபஞ்சத்தின் வரலாறு குறித்த பாடத்தை எடுத்து வருவதாகவும் கூறினார்.

First published:

Tags: Artificial Intelligence, Technology