முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 5 நாட்களில் 1 மில்லியன் யூசர்களை எட்டிய ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

5 நாட்களில் 1 மில்லியன் யூசர்களை எட்டிய ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

 செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

வெளியிடப்பட்ட ஐந்து நாட்களிலேயே ChatGPT அதிரடியாக ஒரு மில்லியன் யூசர்களை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட் என்று தற்போது ChatGPT என்கிற இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எல்லோரும் பேசி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக இந்த ChatGPT மாறியுள்ளது. OpenAI நிறுவனத்தின் இந்த ChatGPT ஆனது, கூகுளின் நிலையை பின்னுக்கு தள்ளிவிடும் என்று சிலர் கணித்துள்ளனர், மேலும் இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல பயனர்களை சென்றடைந்துள்ளது. நவம்பர் 2022-இல் ஐந்து நாட்களிலேயே இந்த ChatGPT ஒரு மில்லியன் யூசர்களை பெற்று விட்டது. மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், ஸ்பாட்டிபை, ஃபேஸ்புக் ஆகியவற்றை விடவும் மிக விரைவிலேயே ChatGPT இந்த சாதனையை செய்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: சமூக ஊடக உலகில் மிக முக்கியமான இரண்டு செயலிகளாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கருதப்படுகிறது. ஆனால் இரண்டுமே ஒரு மில்லியன் யூசர்களை அடைய பல மாதங்கள் ஆகியுள்ளன. இன்ஸ்டாகிராம் செயலி அக்டோபர் 2010-இல் ஐஓஎஸ் தளத்துடன் தொடங்கப்பட்டது, இது ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டுவதற்கு இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆனது என்று தரவுகள் கூறுகின்றன.

இருப்பினும், இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு தளத்தின் ஏப்ரல் 2012 இல் தொடங்கப்பட்டது. அப்போது ஆண்ட்ராய்டில் வெறும் 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் யூசர்களை தாண்டியது. எனவே, இன்ஸ்டாகிராமின் ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்பட்டபோது இது ஏற்படுத்திய சாதனையை ChatGPT முறியடிக்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்டு செயலி மூலம், இன்ஸ்டாகிராம் தங்கள் ஃபோன்களுக்கு வருவதற்கு நிறைய பேர் காத்திருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஸ்பாட்டிபை: ஸ்பாட்டிபை என்பது உலகின் மிகவும் பிரபலமான மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாகும், ஆனால் இது தனது ஒரு மில்லியன் பயனர்களை பெறுவதில் கடும் போராட்டமாக இருந்துள்ளது. ஸ்பாட்டிபை அக்டோபர் 2008-இல் தொடங்கப்பட்டது. இது 'ஒரு மில்லியன் பயனரை' அடைய ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. மேலும், ஒரு மில்லியன் 'பணம் செலுத்த கூடிய' சந்தாதாரர்களைப் பெறுவதற்கு அதிக காலம் எடுத்து கொண்டுள்ளது. இது டிசம்பர் 2011-இல் தான் இந்த இலக்கை பெற்றுள்ளது. இப்போது உலகளவில் 182 மில்லியன் சந்தாதாரர்களை ஸ்பாட்டிபை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃபிக்ஸ்: ஒரு மில்லியன் சந்தாதாரர்களை அடைவது நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கும் மிகவும் கடினமான பணியாக இருந்துள்ளது. 3.5 வருடங்களை நெருங்கும்போது தான், 1 மில்லியன் பயனர்கள் இது பெற்றது. இந்நிறுவனம் 1999-இல் தொடங்கப்பட்டது மற்றும் பிப்ரவரி 2003-இல் தான் ஒரு மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்தது. நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, டிவிடி வாடகை சேவைக்கு யூசர்கள் பணம் செலுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. இந்நிறுவனம் 2007-இல் தான் ஒரு ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாக மாற்றப்பட்டது.

Also Read : சுழற்சியை நிறுத்தி எதிர்திசையில் சுழலும் பூமி உட்கரு.... என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

ChatGPT:

OpenAI நிறுவனத்தின் ChatGPT செயற்கை நுண்ணறிவானது வெறும் ஐந்து நாட்களிலேயே ஒரு மில்லியன் பயனர்களை எட்டியது என்கிற தகவலை அந்நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இப்போது எத்தனை பேர் ChatGPT-ஐ பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அதிக யூசர் இதை பயன்படுத்தி வருவதால் ChatGPT அவ்வப்போது சரியாக வேலை செய்வதில்லை. இதன் பயன்பட்டை இயக்குவதற்கான அதிக கம்ப்யூட்டிங் செலவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் தற்போது இதில் எப்படி பணம் ஈட்ட முடியும் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

First published:

Tags: Android, Android Apps, Artificial Intelligence, Technology