கூகுள் அக்கவுண்ட் பெயரை மாற்றாமல் யூடியூப் சேனல் பெயரை மாற்றுவது எப்படி?

மாதிரிப் படம்

Youtube: யூடியூப் கிரியேட்டர்ஸ்களின் கூகுள் கணக்கை பாதிக்காமல் சேனல் பெயர் மற்றும் ப்ரொபைல்-ஐ மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

  • Share this:
யூடியூப் நிறுவனம் சமீபத்தில்  அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. முக்கியமாக இது யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்காக என்றே கூறலாம். அதாவது யூடியூப் கிரியேட்டர்ஸ்களின் கூகுள் கணக்கை பாதிக்காமல் சேனல் பெயர் மற்றும் ப்ரொபைல்-ஐ மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, சேனல் பெயரில் செய்யும் மாற்றங்கள் பிற கூகுள் சேவைகளான ஜிமெயில் போன்றவற்றில் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இந்த புதிய அப்டேட், சேனல் பெயருக்குப் பதிலாக தங்களது உண்மையான பெயரில் மின்னஞ்சல்களை அனுப்ப விரும்பும் கிரியேட்டர்ஸ்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இருப்பினும், verification badge கொண்ட கிரியேட்டர்ஸ்களுக்கு இது ஒரு குறைபாடாக இருக்க வாய்ப்புகள் உள்ளது, ஏனெனில் அவர்கள் தங்கள் பெயரை மாற்றினால் check mark-ஐ இழக்கு நேரிடும். எனினும் verification badge-ஐ மீண்டும் பெற விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரியேட்டர்ஸ்கள் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. டிஜிட்டல் பி.வி.சி.ஆதார் அட்டை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?..

எனவே, கூகுள் கணக்கு பெயரை மாற்றாமல் யூடியூப் சேனல் பெயரை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.,

உங்கள் ஸ்மார்ட்போன் / மொபைல் தொலைபேசியில் பெயரை மாற்ற :

1: உங்கள் ஸ்மார்ட்போனில் YouTube ஆப்பை திறக்கவும். உங்கள் அக்கவுண்ட்டை லாகின் செய்யவும்.

2: உங்கள் சேனலுக்குச் செல்லவும். பின்னர் Edit channel பகுதிக்கு செல்லவும்.

3: இங்கே, நீங்கள் உங்கள் பெயரைத் திருத்தலாம் அல்லது சேர்க்கலாம். உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்த பின்னர் OK என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.

4: புகைப்படத்தை கிளிக் செய்தால் உங்கள் ப்ரொபைல் புகைப்படத்தை மாற்றி கொள்ளலாம். இதற்கு உங்கள் சேனலில் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து புதிய புகைப்படம் எடுக்கலாம் அல்லது உங்கள் தொலைபேசியில் ஏற்கனவே உள்ள புகைப்படத்தையும் அப்லோடு செய்யலாம். அப்லோடு செய்த பின்னர் சேமி என்பதை அழுத்தவும்.

இதையும் படிங்க: வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்..

உங்கள் கணினியில் பெயரை மாற்ற :

1: உங்கள் கணினியில் YouTube ஆப்பை திறக்கவும். உங்கள் அக்கவுண்ட்டை லாகின் செய்யவும்.

2: உங்கள் சேனலுக்குச் செல்லவும்.

3. இடது பக்கம் இருக்கும் மெனுவில் Customisation-ஐ கிளிக் செய்து Basic Info-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.

4. புதிய சேனல் பெயரை மாற்ற அல்லது சேர்க்க Edit என்பதைக் கிளிக் செய்யவும். மாற்றங்களை சேமிக்க, Publish என்பதை அழுத்தவும்.

5. சுயவிவரப் புகைப்படத்தைப் புதுப்பிக்க, மேல் இடது மெனுவில் Customisation-ஐ என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.

6. Branding > Upload and add a new image என்பதைத் தேர்ந்தெடுத்து புதிய படத்தைச் சேர்க்கவும். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் புகைப்படத்தை சரிசெய்யவும். மாற்றங்களைச் சேமிக்க publish என்பதை கிளிக் செய்யவும். உங்கள் விவரங்கள் சேமிக்கப்படும்.

 


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: