முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நிலவின் பள்ளங்களைத் துல்லியமாக படம் பிடித்த சந்திரயான்2! இஸ்ரோ வெளியிட்ட இரண்டாவது புகைப்படம்

நிலவின் பள்ளங்களைத் துல்லியமாக படம் பிடித்த சந்திரயான்2! இஸ்ரோ வெளியிட்ட இரண்டாவது புகைப்படம்

நிலவின் புகைப்படம்

நிலவின் புகைப்படம்

ஆகஸ்ட் 23-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை, நிலவில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  • Last Updated :

சந்திராயன் 2 விண்கலம் நிலவை 2-வது முறையாக எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக ஜூலை 22-ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம், கடந்த 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அடுத்த நாளான ஆகஸ்ட் 21-ம் தேதி சந்திரயான் 2 எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலம் எடுத்த 2-வது புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை, நிலவில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

டெரய்ன் மேப்பிங் கேமரா - 2 மூலமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், ஜாக்சன், மேக், மித்ரா, கொரேலேவ் ஆகிய பள்ளங்கள் தெளிவாக தெரிகின்றன.

Also see:

top videos

    First published:

    Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2